கேபிள் அறுந்து.. குஜராத் பாலம் உடைந்த கடைசி நொடி நடந்தது என்ன? அலறிய மக்கள்.. அதிர வைக்கும் காட்சி
காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக ஷாக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 142 பேர் பலியாகி உள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
20 பேர் வரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாலம் திறக்கப்பட்ட தேதி
இந்த பாலம் நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட முன் கூட்டியே திறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. Oreva என்ற தனியார் நிறுவனம்தான் இந்த பாலத்தை சீரமைத்தது. அதன்பின் எப்.சி வாங்கி திறக்கப்பட வேண்டிய பாலத்தை முன் கூட்டியே திறந்து உள்ளனர் என்பது ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மோர்பி முனிசிபாலிட்டி Oreva நிறுவனம் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இது உறுதி ஆகி உள்ளது. இந்த பாலத்தை குறைந்தது 8 - 12 மாதங்கள் மூடி இருக்க வேண்டும்.

விசாரணை
ஆனால் 7 மாதங்களுக்குள் பணிகளை முடித்து அதை திறந்து உள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் இடையே அனுமதியே வாங்காமல் இவர்கள் பாலத்தை திறந்து உள்ளனர். இந்த பாலத்தை சீக்கிரமே திறந்தது மட்டுமின்றி, பல விதிமீறல்களும் இதில் நடந்து உள்ளன. இந்த பாலத்தில் மொத்தம் 125 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் நடக்க முடியும். அதுவும் மிக அதிகபட்ச வெயிட் ஆகும்.

விதி மீறல்
ஆனால் இதை மீறி பாலத்தில் 500 பேரை அனுமதித்து உள்ளனர். இதில் 400க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்து இந்த பக்கமும், அந்த பக்கமும் ஆடி உள்ளனர். முக்கியமாக பூஜைக்காக வந்த பெண்கள் பலர் இதில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கர்ப்பிணி பெண்கள் கூட இந்த பாலத்தில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த நிர்வாகிகள் யாருமே இல்லை. இரண்டு பேர் மட்டும் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மக்களை உள்ளே அனுப்பி உள்ளனர்.

பூஜா
சாத் பூஜாவை முன்னிட்டு நேற்று 500 பேர் வரை அந்த பாலம் மீது ஏறி உள்ளனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக வந்து உள்ளது. இந்த பூஜை வடஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இந்து பூஜை ஆகும், தீபாவளிக்கு பின் 6 நாட்கள் கழித்து பூஜை நடக்கும். மக்கள் அதிக அளவில் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவது போல இது நீரை மையப்படுத்திய பூஜை ஆகும்.

பெண்கள்
முக்கியமாக பெண்கள் பலர் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். இதில் பரகிரிதி அம்மனை வணங்கி வழிபாடு செய்வார்கள். இதற்காக அவர்கள் நீரில் நின்று வழிபாடு செய்வது, நீரை பார்த்து வழிபாடு செய்வது, நீரை குடித்து வணங்குவது என்று பல்வேறு முறைகளில் பூஜைகளை செய்வார்கள். அதற்காக இந்த பாலத்தில் ஏறியவர்கள்தான் விபத்தில் சிக்கி உள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதற்கான வீடியோ வெளியாகி உள்ளது.

வீடியோ
பாலத்தில் அவர்கள் ஒன்றாக கூடி.. லேசாக அதை ஆட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. பாலம் ஆடிய சில நொடிகளில் ஒரு பக்கம் பாலம் மொத்தமாக உடைந்து கீழே விழுந்துள்ளது. பாலத்தில் இருந்த எல்லோரும் அப்படியே தண்ணீரில் விழுந்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சி அளிக்க கூடியவையாக உள்ளன. இந்த விபத்து தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிரிமினல் வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications