குஜராத் சட்டசபையில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீண்டும் நிறைவேற்றம்!!
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபையில் ஜனாதிபதிகளால் 3 முறை நிராகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
குஜராத் மாநில சட்டசபையில் கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கலுக்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிகளாக இருந்த அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் இந்த சட்டத்துக்கு அடுத்தடுத்து ஒப்புதல் தர மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில் இன்று அதே சட்டம் கூடுதலாக சில அம்சங்களுடன் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி
சந்தேகத்துரிய நபர்களின் தொலைபேசி மற்றும் செல்போன் பேச்சுகளை மாநில அரசு அதிகாரிகள் இடைமறித்து ஒட்டு கேட்கலாம்.
கைது செய்யப்படும் நபர்களிடம் போலீசார் விசாரிக்கும் காலத்தை நீட்டிக்கலாம்.
போலீஸ் உயரதிகாரிகளிடம் பிடிபடும் நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை நீதிமன்ற வழக்குகளில் சாட்சியங்களாக பயன்படுத்தலாம்.
இதனிடையே இந்த சட்டத்தின் உள்நோக்கம் மிகவும் கொடூரமானது. அரசியல் ஆதாயத்துக்காகவே இதை அரசு சட்டமாக நிறைவேற்றியுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications