குஜராத் சட்டசபை தேர்தல்: டிச.9,14-ல் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு; டிச.18-ல் வாக்கு எண்ணிக்கை
குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று பகல் 1 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலுக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதையடுத்து அம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
பொதுவாக இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுடன் குஜராத் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். ஆனால் இம்முறை இமாச்சல பிரதேச தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்தியில் ஆளும் பாஜகவின் தலையீட்டால்தான் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்தார்.

சட்டசபைக்கு 2 கட்ட தேர்தல்
டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி கூறியதாவது: குஜராத் மாநில சட்டசபையின் பதவிக் காலம் ஜனவரி 22-ந் தேதி முடிவடைகிறது. குஜராத்தின் 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

டிச.18-ல் வாக்கு எண்ணிக்கை
டிசம்பர் 9, 14 ஆகிய 2 நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறும். 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதியும் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்படும்.

மகளிர் மட்டும் வாக்கு சாவடிகள்
இம்மாநிலத்தில் மொத்தம் 50,128 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 102 அனைத்து மகளிர் வாக்குச் சாவடியாகும். தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர்.

செலவினங்கள் கண்காணிப்பு
குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் பறக்கும்படை மூலம் கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும்.
இவ்வாறு ஏ.கே. ஜோதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications