இந்தியாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா பாதிப்பா? குஜராத்தில் முதல் கேஸ் பதிவானதாக தகவல் - பின்னணி
காந்தி நகர்: குஜராத்தில் ஒருவருக்கு XE வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக தி இந்து செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Recommended Video
முன்னதாக இந்தியாவில் முதல் நபருக்கு XE வகை கொரோனா இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால் இதை இந்திய ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு மறுத்தது.
அவரின் ஜீனோம் சோதனையில் அப்படி எந்த முடிவும் வரவில்லை என்று கூறியுள்ளது. இதே தகவலை மத்திய சுகாதாரத்துறையும் மறுத்தது.

மும்பை குழப்பம்
மும்பையில் உள்ள அந்த பெண்ணுக்கு XE கொரோனா ஏற்பட்டதா இல்லையா என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில்தான் குஜராத்தில் ஒருவருக்கு XE வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தி இந்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தில் எடுக்கப்பட்ட கொரோனா சாம்பிள் தேசிய நோய் கட்டுப்பாட்டு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ஜீன் சோதனையில் அந்த நோயாளிக்கு XE கொரோனா தாக்கி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

ஜீனோம் சோதனை
XE கொரோனா நோயாளிகளுக்கு இருக்கும் ஜீன் இவரின் கொரோனா மாதிரியில் இருந்துள்ளது. மும்பையில் XE கொரோனா ஏற்பட்டதாக சொல்லப்பட்டவரின் ஜீனை விட இவருக்குத்தான் XE கொரோனாவுடன் அதிக ஒற்றுமை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தேசிய ஜீனோம் கழகமோ, மத்திய அரசோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. குஜராத்தில் இருக்கும் ஜீனோம் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகி ஒருவர் இதை உறுதி செய்துள்ளார்.

உறுதியா?
XE கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. யு.கே, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவும் XE கொரோனா கலப்பு வகை கொரோனா ஆகும். அதாவது இரண்டு வகையான கொரோனா இணைந்து உருவான புதிய வகை. இது ஓமிக்ரானின் BA.1 மற்றும் BA.2 வகை உருமாற்றங்கள் இணைந்து உருவான புதிய வைரஸ்தான் இது. ஓமிக்ரானில் மொத்தமாக மூன்று உட்பிரிவு உள்ளது.

எப்படி உருவானது?
அவை BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் இந்தியாவில் BA.1 பரவி வந்தது. ஓமிக்ரான் BA.2 என்பதுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். இந்த முதல் இரண்டு வகையும் இணைந்து உருவான குழந்தைதான் XE கொரோனா XE கொரோனா முதல் முறையாக யுகேவில் கடந்த ஜனவரி 19ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 600 கேஸ்கள் இதுவரை அங்கு XE கொரோனா மூலம் ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனாவை விட இது 10 மடங்கு வேகமாக பரவ கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

XE கொரோனா
ஆனால் அந்த அளவிற்கு தீவிரமானதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதன் அறிகுறிகள் என்று பார்த்தால் லேசான காய்ச்சல். சிலருக்கு மோசமான காய்ச்சல். நீங்கள் போட்டு இருக்கும் வேக்சினை பொறுத்து அறிகுறிகள் மாறலாம். காய்ச்சல், இருமல், வறண்ட தொண்டை, சளி, தோல் அரிப்பு, முகம் நிறம் மாறுதல் ஆகியவை அடிப்படையான அறிகுறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications