Rajya Sabha Election: குஜராத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 ராஜ்யசபா எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் பெற்றிருக்கிறது. தற்போது 8 பாஜக ராஜ்யசபா எம்.பிக்களில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஜூகால்ஜி தாக்கூர், தினேஷ் அனவாதியா ஆகியோரது எம்பி பதவி காலம் முடிவடைகிறது. இதனையடுத்து குஜராத்தில் 3 ராஜ்யசபா இடங்கள் உட்பட நாடு முழுவதும் 10 ராஜ்யசபா எம்பி பதவி காலி இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது. ஜூலை 17-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. குஜராத் சட்டசபையில் போதுமான பலம் இல்லாத காரணத்தால் இந்த 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு போட்டியிடப் போவது இல்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அகமதாபாத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பாஜக தலைவர்கள், மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications