அந்த வேலையை இனி செய்ய முடியாது... எங்களை சமமாக நடத்துங்க.. குஜராத் கிராம தலித்துகள் அதிரடி
சூரத்: மேல் ஜாதியினர் தங்களை சமமாக நடத்தாமல் இழிவு படுத்துவதால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அருவருப்பான இறந்த மாடுகளை அகற்றும் வேலைகளை இனி செய்ய மாட்டோம் என்றும், குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் பல்வேறு கிராமங்களில் தலித் பிரிவு மக்கள் தான், இறந்த விலங்குகளின் உடல்களை அகற்றும் வேலையை செய்து வருகிறார்கள்
இந்நிலையில் குஜராத்தின் மகேசேனா மாவட்டத்தில் கடி என்ற தாலுகாவில் உள்ள லஹோர் கிராம மக்கள் மேல் சாதியினர் தங்களை இழிவாக நடத்துவதாக குற்றம்சாட்டி, அவர்களின் இறந்த விலங்குகளின் உடல்களை அகற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

தலித் வரவேற்பு
இதற்கு முக்கிய காரணம், லஹோர் கிராமத்தில் தலித் திருமண வரவேற்பின் போது குதிரையில் ஊர்வலமாக வந்துள்ளனர். இதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த உயர்ஜாதியினர் தலித் மக்களை ஒதுக்கி வைக்கும் முடிவினை கடந்த மே 8ம் தேதி எடுத்துள்ளனர். இதனால் தங்களை சமமாக நடத்த மறுப்பதை கண்டித்து இறந்த விலங்குகளை இனி அகற்ற முடியாது என தலித்துக்கள் மறுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதிரடி முடிவு
இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் கூறுகையில், "இரண்டு வருடங்களுக்கு முன்பே எங்கள் கிராமத்தில் இறந்த விலங்குகளின் உடல்களை அகற்றுதற்கு எதிராக குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எங்களின் விலங்குகள் இறந்தால் மட்டுமே அகற்றுவோம். மேல் ஜாதியினரின் விலங்குகளை அகற்ற மாட்டோம்" என்றார்.

இனி செய்ய மாட்டோம்
மேலும் அவர் கூறுகையில், "எங்களது முந்தைய தலைமுறையினர் தான் இதுபோன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இந்த தலைமுறையில் 4 அல்லது 5 டாக்டர்கள் வந்துவிட்டார்கள் , எங்களில் ஒருவர் கல்லூரி முதல்வர்களாக வந்துவிட்டார். ஒருவர் வக்கீல், ஒருவர் போலீஸ் ஏட்டாக வந்துவிட்டார். என இந்த தலைமுறையினர் இறந்த மாடுகளை அகற்றும் வேலைகளை செய்வதை அருவறுப்பாக நினைக்கிறார்கள்.இனி நாங்கள் இந்த வேலைகளை செய்ய மாட்டோம்" என்றார் உறுதியுடன்.

சரியாகிவிட்டது
இது தொடர்பாக அந்த ஊர் ரெவின்யூ கிளர்க் வர்ஷா தாகூர கூறுகையில், தலித்துக்களை ஒதுக்கி வைத்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை இருந்த பெரிய பிரச்னையே தலித் அல்லாதவர்களின் இறந்த மாடுகளை தலித்துக்கள் அகற்ற மறுத்ததுதான். பேச்சுவார்த்தைக்கு பின் சரியாகிவிட்டது என்றார்.

எங்களை சமமாக பாருங்கள்
இதனிடையே தலித் பிரிவினைச் சேர்ந்த பிகாபாய் பார்மர் (81) என்பவரது பேரன் மேகூல் திருமண வரவேற்பில் தான் உயர் ஜாதியினர் பிரச்சனை செய்து இருந்தனர். அவர் இச்சம்பவத்திற்கு பின்னர் கூறுகையில், தலித்துகளுக்கு முடி வெட்டக்கூடாது என முடிதிருத்துவோரை தலித் அல்லாத உயர் ஜாதியினர் மிரட்டினார்கள். நாங்கள் எங்களை சமமாக நடத்த வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications