லிவிங் உறவில் வெடித்த மோதல்.. குஜராத் பெண் காவலரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்.. பின்னணியில் திடுக்
குஜராத்: பெண் காவல் அதிகாரி ஒருவர், சிஆர்பிஎப் வீரருடன் காதலில் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் லிவிங் உறவில் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், பெண் அதிகாரியை, சிஆர்எப் வீரர் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அருணாவை திலீப் கொலை செய்ததற்கான காரணத்தை கேட்டு காவல்துறை அதிர்ந்து போயுள்ளது.
குஜராத் மாநிலம், குட்ச் பகுதியைச் சேர்ந்தவர் அருணா நட்டுபாய் ஜாதவ் (வயது 25). இவர் குட்ச் மாவட்டம் அஞ்சர் காவல் நிலையத்தில் பெண் கூடுதல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் அஞ்சர் அருகே உள்ள சுரேந்திரநகர் பகுதியில் வசித்து வந்தார். அருணாவின் கிராமத்துக்கு அருகே உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப் தக்சியா.

திலீப் தக்சியா சிஆர்பிஎப் வீரராக மணிப்பூரில் பணியாற்றி வருகிறார். அருணா நட்டுபாய் - திலீப் தக்சிய இடையே காதல் மலர்ந்துள்ளது. ஏற்கனவே பரஸ்பரம் அறிமுகமாக இருந்தாலும் பெரியளவுக்கு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர். பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் உறவு காதலாக மாறியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அருணா - தீலிப் இருவரும் லிவிங் டு கெதர் உறவில் இருந்து வந்துள்ளனர். திலீப் அடிக்கடி குஜராத், அஞ்சர் பகுதிக்கு வந்து அருணாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே அவ்வ போது மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் திலீப் விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் உள்ள அருணாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன் தினம், அதாவது வெள்ளிக்கிழமை இரவு அவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் திலீப் பொறுமையை இழந்துள்ளார்.
அருணாவை தாக்கிய திலீப், அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அருணா துடி துடித்து இறந்துவிட்டார். அருணாவை கொலை செய்த திலீப், அடுத்த நாள் காலை அருணா பணியாற்றி வந்த அஞ்சர் காவல்நிலையத்தில் சரண்டராகியுள்ளார். திலீப் தக்சியா மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், அருணா - திலீப் திருமணம் செய்ய திட்டமிட்டு தான் லிவிங்கில் இருந்துள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருணா, திலீப்பின் அம்மா குறித்து கடுமையான சொற்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த திலீப், அருணாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். அந்த சம்பவத்துக்கு பிறகு திலீப் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். பிறகு அவரே காவல் நிலையத்தில் சரண்டராகிவிட்டார். அருணாவின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனை செய்துள்ளோம். திலீப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications