ராகுலுடன் கருத்து வேறுபாடு.... மூத்த காங். தலைவர் குருதாஸ் காமத் அரசியலுக்கு முழுக்கு
மும்பை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் குஜராத், ராஜஸ்தான் மாநில கட்சி மேலிட பொறுப்பாளருமான குருதாஸ் காமத் தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவரும் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி அண்மையில் விலகுவதாகவும் தனிக்கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலரான திக்விஜய்சிங், கட்சி அறிவித்த வேட்பாளர்களை பல கோடி ரூபாய்க்கு பாஜகவிடம் விற்றவர்தான் அஜித் ஜோகி எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த குருதாஸ் காமத், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மும்பை வடகிழக்கு லோக்சபா தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றவர் குருதாஸ் காமத்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இணை அமைச்சராக இருந்தவர். குருதாஸ் காமத் கடந்த 10 நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் தாம் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கூறியுள்ளார்.
மும்பை பிரதேச காங்கிரஸ் தலைவராக சஞ்சய் நிருபம் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலே இம்முடிவை குருதாஸ் காமத் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications