இப்படியுமா நடக்கும்? முடி மாற்று அறுவை சிகிச்சையால் இருவர் பலி! கம்பி எண்ணும் பல் மருத்துவர் அனுஷ்கா
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பல் மருத்துவர் அனுஷ்கா கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் பொறியாளர்களாக இருந்தவர்கள் வினித் குமார் தூபே, பிரமோத் கட்டியார். இவர்களுக்கு தலையில் முடி இல்லாமல் வழுக்கையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து டாக்டர் அனுஷ்கா திவாரி என்பவரிடம் இருவரும் முடி வளர்த்தலுக்கான சிகிச்சைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் இருவருக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தாராம்.
இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி வினித் குமார் தூபேவுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாம். இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி இறந்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவருடைய மனைவி ஜெயா திரிபாதி, கடந்த மே 9ஆம் தேதி புகார் கொடுத்தார்.
அப்போதுதான் முடி மாற்று அறுவைச் சிகிச்சை செய்த அனுஷ்கா பல் மருத்துவர் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயா, அந்த மருத்துவர் மீது புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் அந்த வழக்கை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து உ.பி. முதல்வர் யோகியின் தனிப்பிரிவிற்கு ஜெயா புகார் அளித்ததை அடுத்து போலீஸார் ஜெயாவின் புகாரை பதிவு செய்தனர். தனது புகாரில் ஜெயா கூறியிருப்பதாவது: தனது கணவருக்கு மார்ச் 13 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது முகம் வீங்கியிருப்பதாக கூறி கடந்த மார்ச் 14 ஆம் தேதி அனுஷ்கா எனக்கு போன் செய்தார். இதனால் பதறியடித்தபடி சென்றேன். என் கணவரின் முகம் வீங்கியிருந்தது. இதனால் மருத்துவரை சந்திக்க முயற்சித்தேன். அப்போது மருத்துவர் அங்கு இல்லை. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி எனது கணவர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார் என்றார்கள் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுஷ்கா பல் மருத்துவர் என்றும் தனக்கு சம்பந்தமே இல்லாத முடி சிகிச்சைக்கு அவர் சர்ஜரி செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளித்திருந்தார்.
அதே போல் பிரமோத்தும், அனுஷ்காவிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அனுஷ்காவை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் பல் மருத்துவர் அனுஷ்கா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அனுஷ்காவுக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. தனது துறைக்கு சம்பந்தமில்லாத வேறு துறையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதற்கான போதுமான ஆதாரம் உள்ளது. காகதேவ் காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுஷ்கா மீது தவறு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்றார். இதையடுத்து அனுஷ்காவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அரசு மருத்துவமனைகளில் துப்புரவு தொழில் செய்யும் நபர்கள் டிரிப்ஸ் போடுவது, நர்ஸுக்கு உதவியாக இருப்பது, ஊசி போடுவது, அடிப்பட்ட இடத்தில் மருந்து போட்டு கட்டு போடுவது, மருத்துவருக்கு பதில் செவிலியரே குழந்தை பிறப்பில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பல் மருத்துவர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சையை எப்படி மேற்கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications