அகிலேஷ் யாதவ் அமைச்சர்களில் பாதி பேர் பணத்திலேயே குறியாக இருக்கிறார்கள்: முலாயம் தாக்கு
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் சட்டசபையில் உள்ள அமைச்சர்களில் பாதி பேர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பீகார் முதல்வர் கற்பூரி தாகூரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்காதீர்கள் என்று அகிலேஷ் யாதவ் சட்டசபையில் உள்ள அமைச்சர்களுக்கு நான் அறிவுரை வழங்கினேன். பாதி பேர் என் பேச்சை கேட்டு திருந்திவிட்டனர். ஆனால் மீதமுள்ள பாதி பேர் இன்னும் பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக உள்ளனர்.
பணம் தான் முக்கியம் என்றால் நீங்கள் வியாபாரம் செய்திருக்க வேண்டும். நான் கூட உங்களுக்கு உதவியிருப்பேன். அரசியலில் மக்கள் தானாக வந்து பணம் தருவார்கள்.
இங்கே அமர்ந்திருக்கும் சபாநாயகர் மாதா பிரசாத் பாண்டே பெட்ஷீட் விரித்து மக்களிடம் பணம் வசூலித்திருக்கிறார். மக்கள் லட்சம், லட்சமாக அவருக்கு கொடுத்துள்ளனர். நான் கூடத் தான் அவரைப் போன்று பணம் வாங்கியுள்ளேன். அதை எண்ணவே நான்கு நாட்கள் ஆனது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications