வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருது.. பிரணாப் வழங்கினார்
தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணமடைந்த ஹேங்பன் தாதாவிற்கு அசோக் சக்ரா விருது இன்று வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதினை அவரது மனைவி சாசென் லவாங் பெற்றுக் கொண்டார்.
டெல்லி: இந்தியாவின் 68வது குடியரசு தினம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவிற்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மறைந்த ராணுவ வீரரின் மனைவி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதினைப் பெற்றுக் கொண்டார்.
டெல்லி ராஜ்பாத்தில் 68வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜபாதையில் நடைபெற்று வரும் விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி பட்டத்து இளவரசர் முகமத் பின் சையது பங்கேற்றுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருதை அவருடைய மனைவியிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். பின்னர் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் ஏற்று கொண்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications