‛500 ஆண்டு காத்திருப்பு’.. ராமரை தரிசிக்க நேராக கருவறைக்கு போன அனுமன்! அயோத்தியில் சுவாரசியம்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில் தான் கும்பாபிஷேக முதல் நாளான நேற்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
500 ஆண்டுகால அயோத்தி ராமர் கோவில் பிரச்சனைக்கு 2019ல் முடிவுக்கு வந்தது. உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கிய நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது.

நேற்று முதல் மக்கள் கோவில் கருவறையில் உள்ள 5 வயது குழந்தை பருவ ராமர் சிலையை தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16ம் தேதி கோவிலில் தொடங்கியது.
கடந்த 17ம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது நிரம்பிய பாலகனாக ராமர் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 18ம் தேதி வேதமந்திரங்கள் முழங்க கோவிலில் சிலை நிறுவப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது.
‛‛எனக்கு அந்த பிரசாதம் தான் வேணும்’’.. 11 நாள் விரதம் முடிக்க பிரதமர் மோடி கேட்டது என்ன? சுவாரசியம்
பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சகர்களுடன் பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். பிரான் பிரதிஷ்டை முடிந்த பிறகு பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. இன்று 2வது நாளாக பொதுமக்கள் அயோத்தி கோவிலில் ராமரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் முதல் நாளான நேற்று பொதுமக்கள் வரிசையில் வந்து ராமரை தரிசனம் செய்து திரும்பி கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் தான் குரங்கு ஒன்று கோவில் கருவறைக்குள் நுழைந்து ராமனை தரிசிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி ராமர் கோவிலின் அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
அயோத்தி போல்.. ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்கனும் - மாஜி தொல்லியல் நிபுணர் கேகே முகமது
‛‛ராமர் கோவிலில் அழகான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இன்று (அதாவது நேற்று) மாலை 5.50 மணிக்கு கூடா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக குரங்கு ஒன்று நுழைந்து கருவறையில் உற்சவ மூர்த்தி அருகே சென்றது. இதை அங்கிருந்த பாதுகாப்பு காவலர் பார்த்தார். சிலையை கீழே தள்ளிவிடும் என நினைத்து காவலர் வேகமாக சென்றார். இதை கவனித்த குரங்கு மெதுவாக வடக்கு கதவை நோக்கி ஓடியது. கதவு மூடப்பட்டவுடன் கிழக்கு நோக்கி சென்று பக்தர்களுக்கு இடையூறு இன்றி அமைதியாக சென்றது. இதுபற்றி காவலர் பால ராமரை காண அனுமனே வந்திருக்கிறார்’’ என்றார்.
ராமாயணத்தை பொறுத்தமட்டில் ராமன் மற்றும் அனுமனுக்கு மிக நெருக்கமான பந்தம் உள்ளது. ராமனின் தீவிர பக்தனாக அனுமன் இருந்ததாக கூறப்படுகிறது. சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்தபோது ராமனுக்கு உதவியாக இருந்தவர் அனுமன் தான். விஷ்ணுவின் அவதாரமாக ராமர் பூமியில் பிறப்பெடுத்ததாக கூறப்படும் நிலையில் வடஇந்தியாவில் அனுமன் சிவனின் அவதாரம் என கூறப்படுகிறது.
இப்படி ராமன்-அனுமன் இடையேயான பந்தம் உள்ளது. இத்தகைய சூழலில் தான் அயோத்தி ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த நாளே குரங்கு ஒன்று கோவில் கருவறைக்குள் நுழைந்து பால ராமரை காண சென்ற சம்பவம் நெகிழ வைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications