‛‛எனக்கு அந்த பிரசாதம் தான் வேணும்’’.. 11 நாள் விரதம் முடிக்க பிரதமர் மோடி கேட்டது என்ன? சுவாரசியம்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக முடிவடைந்தது. பிரதமர் மோடி 11 நாள் கடும் விரதம் இருந்து கோவில் கருவறையில் பிரான் பிரதிஷ்டை செய்தார். இந்நிலையில் தான் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது விரதத்தை முடித்து கொண்டார். அப்போது விரதம் முடிக்க பிரதமர் மோடி கேட்ட பொருள் என்ன? அதன் பின்னணி சுவாரசியம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
500 ஆண்டு சர்ச்சை, விவாதத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் உள்ளார். இந்த அறக்கட்டளை தான் கோவிலுக்கான நன்கொடை, கட்டுமான பணிகளை கண்காணித்து வருகிறது.
அதன்பிறகு பிரதமர் மோடி 2020ம் ஆண்டில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். 4 ஆண்டுகளாக பணிகள் நடந்து வந்தது. மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் முதல் தளத்தின் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். இதன்மூலம் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது. இன்று முதல் மக்கள் பால ராமர் சிலையை தரிசனம் செய்து வருகின்றனர்.
‛ராமர் கோவில் கட்டும்போது தான் அயோத்தி வருவேன்’.. 32 ஆண்டு சபதத்தில் வென்ற பிரதமர் மோடி! பின்னணி
முன்னதாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் மோடி 11 நாள் கடும் விரதத்தை கடைப்பிடித்தார். கடந்த 11 நாட்களும் இளநீர் பருகி, பழங்களை மட்டும் உணவாக எடுத்து கொண்டார். அதோடு மெத்தைகளை தவிர்த்த தரையில் போர்வையுடன் மட்டும் அவர் தூங்கியுள்ளார். கடந்த 12ம் தேதி விரதத்தை தொடங்கிய அவர் நேற்று கும்பாபிஷேகம் முடிவடைந்த பிறகு நிறைவு செய்தார். கோவிலின் வெளிப்புறத்தில் பிரதமர் மோடி தனது 11 நாள் விரதத்தை முடித்து கொண்டார். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் வழங்கிய பிரசாதத்தை ஏற்று பிரதமர் மோடி விரதத்தை முடித்தார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி தனது விரதத்தை முடித்து கொள்ள குறிப்பிட்ட ஒரு பொருளை சுட்டிக்காட்டி அதனை தனக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதுபற்றி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் விளக்கி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது: பொதுவாக விரதத்தை முடித்து கொள்ள எங்களை பொறுத்தமட்டில் தேன் மற்றும் தண்ணீர் + எலுமிச்சை ஜூஸ் தான் வழங்குவோம். பிரதமர் மோடி என்னிடம் தனியாக பேசினார். அப்போது விரதத்தை முடித்து கொள்ள ராமரின் சரணாமிர்தம் (Charnamrit) கேட்டார். இதனால் நாங்கள் எங்கள் முடிவை மாற்றி கொண்டோம்.
சரணாமிர்தம் கொடுத்து தான் பிரதமர் மோடியின் விரதத்தை முடித்து வைத்தேன். அந்த நேரத்தில் நான் ஒரு தாயின் அன்பை உணர்ந்தேன். என் மகனுக்கு வழங்கி நோன்பு துறப்பது போல் உணர்ந்தேன். மேலும் விரதத்தின்போது ஒரு நாளுக்கு ஒருமுறை சாப்பிடலாம் என கூறினோம். ஆனால் அவர் திட உணவை எடுத்து கொள்ளவே இல்லை’’ என்றார்.
அயோத்தியில் ராமர் கோவில் ஓகே.. மசூதி எங்கே? விஜய் டிவி ‛புகழ்’ நாஞ்சில் விஜயன் பரபர வீடியோ!
அதாவது சரணாமிர்தம் என்பது கடவுளின் பாத பூஜைக்கு பயன்படுத்தப்படும் பால் அல்லது தண்ணீரை குறிக்கும். இது பிரசாதமாக வழங்கப்படும். இந்த பிரசாதத்தை தீர்த்தமாக குடிப்பதன் மூலம் பாசிட்டிவ் மனநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் நேற்று 5 வயது பால ராமர் சிலையின் பாதபூஜையில் பயன்படுத்தப்பட்ட இனிப்பு கலந்த பால் சரணாமிர்தமாக பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications