மகாத் காந்தி 146வது பிறந்தநாள்... மோடி, ஜெ., ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
டெல்லி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் 146வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி , முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
நாட்டின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.இன்று மகாத்மாவின் 146வது பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது. நாடு முழுவதும் உள்ள மகாத்மாவின் சிலைக்கு தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் மகாத்மாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்டு வரும் திமுக பொருளாளர் ஸ்டாலின், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மணப்பாறையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அஹிம்சை வழியில் போராடி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மாவின் பிறந்தநாள், "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லால்பகதூர் சாஸ்திரியின் 11வது பிறந்தநாள்:
இதேபோல் லால்பகதூர் சாஸ்திரியின் 111வது பிறந்த நாளும் இன்று கொண்டாடப் படுகிறது. அதனையொட்டி, லால்பகதூர் சாஸ்திரியின் உருவச் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘சாஸ்திரி ஒரு எளிமையான ஒருமைப்பாட்டு தலைவர். அவர் நமது நாட்டின் மிகப்பெரிய சொத்து. ஜெய்ஜவான், ஜெய்கிசான் போன்றவை விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் நலனுக்காக பாடுபட்ட சாஸ்திரியின் கொள்கைக்கு அழகூட்டும்' என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications