ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை திறப்பு !
தமிழ் அமைப்புகளின் முயற்சியால் ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை நேற்று மாலை நிறுவப்பட்டது.
ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை நேற்று மாலை நிறுவப்பட்டது. முதல்வர் ஹரீஷ்ராவத் சிலையை திறந்து வைத்தார்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். இதற்காக தமிழகத்தின் நாமக்கல்லில் திருவள்ளுவர் உருவச் சிலை வடிவமைக்கப்பட்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு கொல்லிமலை அடிவாரத்தில் 10.50 டன் எடையில் கல் எடுக்கப்பட்டு. 20 சிற்பக் கலைஞர்கள் தொடர்ந்து 35 நாள்கள் பணியாற்றி சிலையை உருவாக்கினர்.

இதையடுத்து தமிழகத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை கடந்த ஜூன் மாதம் ரயில் மூலம் ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டது. ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள், இதை திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமாக கருதி கண்டித்து குரல் எழுப்பின. இதையடுத்து சிலையை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு உதவி செய்வதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், தமிழ் அமைப்புகளிடம் உறுதியளித்தார்.
இதன்படி, ஹரித்துவாரில் உள்ள மேளா பவன் வளாகத்தில் நேற்று மாலை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ஹரீஷ் ராவத் சிலையை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தமிழ் அமைப்பினர் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications