ஹரியானா சட்டசபை தேர்தலில் 'பாஜக'வுக்கு 'சம்பவம்' வெயிட்டிங்.. காங்கிரஸ் 'தலைகள்' ஓவர் ஹேப்பி!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை அக்கட்சித் தலைவர்களை பெரும் கலக்கமடையச் செய்துள்ளது என்கின்றன கள தகவல்கள். ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள், விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், அக்னிவீரர்கள் திட்டம் என அத்தனையும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்பதால் காங்கிரஸ் கட்சி உற்சாக நம்பிக்கையுடன் தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 1-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

காங்கிரஸ்: 1966-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக காங்கிரஸ் கட்சிதான் இருந்து வந்தது. இதன் பின்னர் லோக் தள், ஹரியானா விகாஸ் கட்சி தலையெடுத்து காங்கிரஸின் 'ஏகபோகத்தை' முடிவுக்குக் கொண்டு வந்தன.
ஹரியானாவில் காங்கிரஸ், பாஜக: 2009-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் கூட காங்கிரஸ் 40 இடங்களிலும் லோக்தள் 31 இடங்களையும் கைப்பற்றியது. அத்தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 4 இடங்கள்தான் கிடைத்தது. ஆனால் 2014-ம் ஆண்டு முதன் முதலாக பாஜக 47 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அத்தேர்தலில் லோக்தளம் 19, காங்கிரஸ் 15 இடங்களில்தான் வென்றன. இதனால் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸுக்கு முடிவுரை எழுதப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தல் பாஜகவுக்கு அதிர்ச்சி தரக் கூடியதாகவே இருந்தது. அத்தேர்தலில் பாஜக 40 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வென்றது. லோக்தள் கட்சி இரண்டாக உடைந்து ஜேஜேபி என தனிக் கட்சியை துஷ்யந்த் சவுதாலா உருவாக்கி இருந்தார். அந்த கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. ஹரியானாவில் முன்னாள் துணை பிரதமர் தேவிலால் உருவாக்கிய லோக் தள் கட்சிக்குதான் முடிவுரை எழுதப்பட்டுவிட்டது என்பதை 2019 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.
2019 ரிசல்ட்: 2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள்:
பாஜக -40 (36.49%)
காங்கிரஸ்- 31 (28.08%)
ஜேஜேபி 10 (14.80%)
லோக் தள் 1
ஹரியானா லோகித் கட்சி 1
சுயேட்சைகள் 7
பாஜக தடுமாற்றம்: கடந்த தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மைக்கான 46 இடங்களைக் கைப்பற்றவில்லை. இதனால் பாஜக- ஜேஜேபி மற்றும் சுயேட்சைகள் இணைந்த கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் ஜேஜேபி பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டது. ஹரியானாவில் பாஜகவின் மூத்த தலைவரான மனோகர் லால் கட்டார்தான் முதல்வராக இருந்தார். ஆனால் அவரது ஆட்சிக்கு எதிரான மக்கள் கொந்தளிப்பு பாஜகவுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டு அவருக்கு பதில் நயாப் சைனி சிங் முதல்வராக்கப்பட்டார். நயாப் முதல்வரான பின்னர், கூட்டணி கட்சியான ஜேஜேபி ஆட்சிக்கு தந்த ஆதரவை வாபஸ் பெற்றது. சுயேட்சைகளும் ஆதரவை திரும்பப் பெற்றனர்.
லோக்சபா தேர்தல்: தற்போதைய ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக தனித்தே விடப்பட்டிருக்கிறது. ஏனெனில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவால் ஹரியானாவில் ஜொலிக்க முடியவில்லை. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜகவுக்கு இந்த முறை 5 இடங்கள்தான் கிடைத்தன.
திசைமாறிய வாக்குகள்: ஹரியானாவில் காங்கிரஸ் கை தற்போது ஓங்கியே இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஹரியானாவின் பெரும்பான்மை சமூகங்களான ஜாட் மற்றும் தலித்துகளின் வாக்குகள் அப்படியே 'பழைய பாணியில்' காங்கிரஸுக்கு திரும்பிவிட்டன என்பதையே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.
எத்தனை எத்தனை காரணங்கள்: அத்துடன் ஆளும் பாஜக அரசு மீதான கடும் அதிருப்தி அலை, இப்போதும் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் போராடும் விவசாயிகள் போராட்டம், நாட்டுக்கு அதிகமான மல்யுத்த வீரர்களைக் கொடுத்த ஹரியானாவின் பிள்ளைகள் வீதிகளில் இறங்கி போராடியது, அக்னி வீரர் திட்டத்தின் பாதிப்புகள், பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹரியானாவின் மகள் வினேஷ் போகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, வேலைவாய்ப்பின்மை, உச்சகட்ட உட்கட்சி பூசல் என ஆளும் பாஜக அரசு வீழ்ந்து போகும் என்பதற்கான ஏராளமான காரணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
காங்கிரஸ் நம்பிக்கை: அத்துடன் காங்கிரஸ் கட்சியும் எப்படியும் ஹரியானாவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் இருக்கிறது. ஹரியானா காங்கிரஸ் உட்கட்சி பிரச்சனைகளை டெல்லி மேலிடம் மிகத் தீவிரமாக கண்காணித்து சமாதான படலங்களை ஜரூராகவும் செய்து வருகிறது. இதனால்தான் ஹரியானாவில் பாஜகவின் அத்தியாயமானது அக்டோபர் 1-ந் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்கிற உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
-
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications