தீபிகா படுகோனே, பன்சாலி தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு: ஹரியானா பாஜக தலைவர் பகீர் அறிவிப்பு
தீபிகா படுகோனே மற்றும் பன்சாலி தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ10 கோடி பரிசு தருவதாக கூறியுள்ளார் ஹரியானா பாஜக தலைவர்.
சண்டிகர்: பத்மாவதி திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரது தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு தரப்படும் என ஹரியானா பாஜக மூத்த தலைவர் சூரஜ்பால் பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மினியின் கதை பத்மாவதி என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இந்த ராணி பத்மினி ராஜபுத்திர மன்னர் ரத்தின சிம்மா அல்லது ரத்தன்சிங்கின் மனைவி.

இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்திருக்கிறார். ஆனால் ராணி பத்மினியை கொச்சைப்படுத்தும் வகையில் டெல்லி மன்னார் அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு இருந்ததாக படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது ராஜபுத்திரர்களின் குற்றச்சாட்டு.
இதை படக்குழு மறுத்துள்ள போதும் ராஜபுத்திரர்கள் பல மாநிலங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம்; தலையை கொண்டு வந்தால் ரூ5 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டது.
தற்போது ஹரியானா மாநில பாஜக மூத்த தலைவர் சூரஜ்பால், தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலையை வெட்டி எடுத்தால் ரூ10 கோடி பரிசு தரப்படும் என பகீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications