"ஜிலேபி சாப்பிடுங்க பிரண்ட்ஸ்.." வாலண்டியராக வண்டியில் ஏறிய ராகுல் காந்தி.. வச்சி செய்யும் பாஜக
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இதில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை பாஜக ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் ஹரியானா தேர்தல் முடிவுகளுடன் ஜிலேபியும் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் உள்ள நிலையில், அனைத்திற்கும் கடந்தவாரம் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. அப்போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் பல தொகுதிகளில் முதலில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தன. ஆனால், வாக்குப்பதிவு நேரம் செல்ல செல்ல டிரெண்ட் மொத்தமாக மாறியது. பாஜக பல இடங்களில் முன்னிலைக்கு வந்தது. தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்த்தால் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிகிறது.
இதை பாஜகவினர் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் ஹரியானா தேர்தல் முடிவுகளுடன் ஜிலேபியும் டிரெண்டாகி வருகிறது. தேர்தல் முடிவுகளுக்கும் ஜிலேபிக்கும் என்ன தொடர்பு. இது டிரெண்டாக என்ன காரணம் என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம்.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஹரியானா அரசியலுக்கு ஜிலேபியை கொண்டு வந்தது வேறு யாரும் இல்லை ராகுல் காந்தி தான். இப்போதே தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஹரியானாவில் உள்ள பாஜகவினர் அங்குள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு ஜிலேபியை பரிசாக அளித்து வருகிறார்களாம். சமூக வலைத்தளங்களிலும் ஜிலேபி டிரெண்டாக இதுவே காரணமாகும்.
ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்திக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா ஜலேபியை பரிசாக வழங்கினார். அந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "எனக்கு இப்போது 54 வயதாகிறது. இதுவரை நான் சாப்பிட்டதிலேயே இதுதான் சிறந்த ஜிலேபி.. இந்த ஜிலேபிகளை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்..
இதை நாம் இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த ஜிலேபிகளை செய்யத் தொழிற்சாலைகளை அமைக்கலாம்.. அப்படி அமைத்தால் பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்" என்று கூறியிருந்தார்.
அதாவது மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மையைக் குறித்தே அவர் இதுபோல பேசியிருந்தார். இது அங்கு மிகப் பெரிய அரசியல் விவகாரமாக மாறியது. ராகுல் காந்தி பேச்சுக்கு ஹரியானா பாஜகவினர் பதிலடி சொல்ல, அதற்குக் காங்கிரஸ் பதிலளிக்க இதுவே பெரிய விவகாரமானது.
ஹரியானா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இரண்டு நாட்கள் இருந்த போது கூட ராகுல் காந்தி ஜிலேபி குறித்து ஒரு போஸ்ட் போட்டார். அாவது, "கோஹானாவில் தயாரிக்கப்படும் சுவையான ஜிலேபிகள் குறித்தும் அதை நாடு முழுக்க கொண்டு செல்வது எப்படி என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறேன்" என்பது போல ட்வீட் செய்திருந்தார்.
இதற்காகவே இப்போது நெட்டிசன்கள் ஜிலேபியை டிரெண்ட் செய்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியானதும் யாருக்கு யார் ஜிலேபியை தந்துள்ளனர் என்பது தெரிந்துவிட்டதாக பாஜகவினர் நக்கலடித்து வருகிறார்கள். மேலும், இன்னும் சிலர் தாங்கள் ராகுல் காந்திக்கே ஜிலேபி தரப் போவதாகவும் சொல்லி வருகிறார்கள். இதன் காரணமாகவே ஹரியானா சட்டசபைத் தேர்தல் முடிவுகளுடன் ஜிலேபியும் இப்போது டிரெண்டாகி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications