ஐ.பி.எஸ் என்று கூறி ரூ.125 கோடி ஆட்டையை போட்ட பி.எஸ்.எப் ஆபிசர்..வீட்டை பார்த்து மிரண்டுபோன போலீஸ்!
குர்கான்: ஹரியானா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி பலரையும் ஏமாற்றி மோசடி செய்து ரூ.125 கோடி சம்பாதித்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
என்னதான் சட்டம், காவல்துறை கண்டிப்பு இருந்தாலும் மோசடி செய்பவர்கள் தங்களது திட்டங்களை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சிலர் போலீஸ் கையில் சிக்கி நீதிமன்றத்தில் தண்டனை பெற்று விடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் கையில் சிக்காமல் எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

மோசடி மன்னன்
இதே வரிசையில்தான் மக்களை ஏமாற்றி கோடி, கோடியாக பணம் சம்பாதித்துள்ளார் எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) அதிகாரியாக பணிபுரியும் பிரவீன் யாதவ். இவர் ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் துணை கமாண்டன்ட் ஆக பணியாற்றி வருகிறார். ஆனால் வெளியே தன்னை இந்தியக் காவல் சேவை அதிகாரியாக(ஐ.பி.எஸ்) காட்டிக் கொண்டார்.

125 கோடி ரூபாய் மோசடி
தான் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டே பல பேரிடம் மொத்தமாக 125 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதாவது ஐபிஎஸ் அதிகாரியாகக் காட்டிக்கொண்டு, என்எஸ்ஜி வளாகத்தில் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெறுவதாகக் கூறியே பணத்தை கறந்துள்ளார். இது தொடர்பாக பல புகார்கள் வந்த நிலையில் மோசடி மன்னன் பிரவீன் யாதவ்வை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

குடும்பமே உடைந்தை
அவரிடம் விசாரித்தபோதுதான் அவர்களுக்கு மேலும் பல அதிர்ச்சி காத்திருந்தது. பிரவீன் யாதவின் மோசடிக்கு அவரது மனைவி மம்தா யாதவ், சகோதரி ரிது ஆகியோர் உடைந்தையாக இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்த மேலும் ஒருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இதுக்கு பிளாஷ்பேக் வேற
''பிரவீன் யாதவ் தான் மோசடி செய்த பணம் அனைத்தையும் என்எஸ்ஜி பெயரில் போலி கணக்கிற்கு மாற்றினார். இந்த கணக்கை ஆக்சிஸ் வங்கியில் மேலாளராக இருக்கும் அவரது சகோதரி ரிது யாதவ் தொடங்கினார்'' என்று போலீசார் தெரிவித்தனர். "பங்குச் சந்தையில் பிரவீன் யாதவ் ரூ.60 லட்சம் நஷ்டம் அடைந்தார். இதனால விரக்தி அடைந்த அவர் மக்களை ஏமாற்றி பல பல கோடி சம்பாதிக்க ஆரம்பித்தார்'' என்று குர்கான் காவல்துறையின் துணை ஆணையர் பால் சிங் கூறினார்.

வாயடைத்து போன போலீஸ்
மோசடி செய்த பணத்தின் மூலம் பிரவீன் யாதவ் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார். அவரது வீட்டுக்கு சோதனையிட சென்ற போலீசார் மிரண்டு போனார்கள். ஏனெனில் மோசடி பணத்தில் மிகப்பெரிய சொகுசு பங்களாவை கட்டி இருந்தார் பிரவீன் யாதவ். அங்கு இருந்து 14 கோடி ரொக்கம், ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள், கணக்கில் வராத சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவரது வீட்டில் ஷோரூம்போல் பிஎம்டபிள்யூ, ஜீப், மெர்சிடிஸ் உள்ளிட்ட ரூ.14 கோடி மதிப்பிலான 7 சொகுசு கார்கள் இருந்ததை பார்த்து போலீசார் வாயடைத்து போனார்கள். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட பிரவீன் யாதவ் மற்றும் அவரது குடும்பம் தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications