சர்ச்சை பேச்சு: சல்மான்கானிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் நோட்டீஸ்
சண்டீகர்: ஹிந்தி நடிகர் சல்மான்கானிடம் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட பெண் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் தான் நடித்திருக்கும் சுல்தான் படம் குறித்து சல்மான் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ''மல்யுத்த வீரராக நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். தினமும் மல்யுத்தக் காட்சிகளில் நடித்து வீடு திரும்பும்போது நேராக நடக்க முடியாமல் அவதிப்படுகிறேன்.

இதனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்கிறேன்'' என்று கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சல்மான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த நிலையில் ஹிரியாணா மாநிலம் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவர் தனது வழக்கறிஞர் மூலம் சல்மான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பலாத்காரத்துக்கு உள்ளான தனக்கு சல்மான்கானின் கருத்து மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ரேஷ்மா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து ரேஷ்மாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கோரி அவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பின்போது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணாக தான் உணர்ந்ததாக சல்மான்கான் கூறியிருந்தார். இதற்காக அந்தப் பெண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே, மகாராஷ்டிர மகளிர் ஆணையம் நேரில் ஆஜராகுமாறு சல்மான்கானுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications