ஹரியானா புதிய முதல்வராக எம்.எல். கட்டார் தேர்வு! அக். 26-ல் பதவியேற்க ஆளுநர் அழைப்பு!!
சண்டிகர்: ஹரியானாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல். கட்டாரை வரும் 26-ந் தேதி ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் சோலங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, கட்சியின் துணைத்தலைவர் தினேஷ் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெங்கையா தகவல்
முன்னதாக புதிய முதல்வரை தேர்வு செய்த பிறகு, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை சமர்ப்பிக்கப்போவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

யார் யார் பெயர்?
புதிய முதல்வர் பதவிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெயரையும் கட்சி மேலிடம் பரிசீலித்தது. மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குஜ்ஜார், ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.

ஆர்.எஸ்.எஸ். கட்டார்
மேலும் மாநில பாஜக தலைவர் ராம்விலாஸ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முன்னாள் உறுப்பினர் எம்.எல்.க ட்டர், செய்தித்தொடர்பாளர் கேப்டன் அபிமன்யு, விவசாய பிரிவு தலைவர் ஓம்பிரகாஷ் தாங்கர், அனில் விஜ், காங்கிரசில் இருந்து விலகி வந்த வீரேந்தர்சிங் ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபட்டன.

ஜாட் இனத்தவருக்கு?
ஹரியானா மாநிலத்தில், ஜாட் இனத்தவர்களே பெரும்பாலும் முதல்வர் பதவியை வகித்துள்ளனர். அதனடிப்படையில் கேப்டன் அபிமன்யு, வீரேந்தர்சிங் ஆகியோர் ஜாட் இனத்தவர் ஆவர். இவர்களில் ஒருவருக்குத்தான் அதிக வாய்ப்பு என்றும் கூறப்பட்டது.

எம்.எல். கட்டாரே முதல்வர்
இந்த நிலையில் எம்.எல். கட்டார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் அல்லாத ஒருவர் முதல்வராகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டார் தேர்வு ஏன்?
இந்த நிலையில் எம்.எல். கட்டார் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் அல்லாத ஒருவர் முதல்வராகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் சோலங்கியை நேரில் சதித்த எம்.எல். கட்டார் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து வரும் 26-ந் தேதி ஆட்சி அமைக்குமாறு கட்டாரை ஆளுநர் கேட்டுக் கொண்டார். ஹரியானாவில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாட் சமூகத்தைச் சேராத ஒருவர் முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications