முஸ்லிம் வேட்பாளரே இல்லாமல்.. ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவின் இந்துத்துவ ஃபார்முலா.. ஒர்க் அவுட் ஆனதா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இந்துத்துவா அரசியல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் 3 மடங்களின் துறவிகள் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.. இந்த பார்முலா ஒர்க்அவுட் ஆனதா என்ற கேள்வி எழுகிறது.
இதுவரை தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இனிமேல் உண்மையான கள நிலவரம் தெரியப்போகிறது.

உத்தரப்பிரதேசத்தை போலவே ராஜஸ்தானில் மடத்தின் தலைவர்களான மூன்று துறவிகளுக்கு போட்டியிட பாஜக வாய்ப்பளித்திருந்தது. உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஒரு துறவி ஆவார். உபி முதல்வர் யோகியை போல், மேலும் பல துறவிகள் பாஜகவில் முன்னாள் எம்பிக்களாகவும் தற்போதைய எம்பிக்களாகவும் இருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் அம்மடத் துறவிகளின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆதரவும் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக வாய்ப்பு அளித்திருந்தது. ராஜஸ்தானின் திஜாரா மடத்தின் பாலக்நாத், அழ்வரில் போட்டியிட்டுள்ளார். பிரபல ஹவா மெஹல் மடத்தின் ஆச்சார்யா பால்முகுந்த், ஜெய்பூரில் போட்டியிட்டுள்ளார். போக்ரான் மடத்தின் பிரதாப்புரி அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த மூன்று துறவிகளுமே அதிக சொத்துகள் கொண்ட மிகவும் செல்வாக்கான துறவிகள் ஆவர்.
ராஜஸ்தானின் பாஜகவில் ஒரே முஸ்லிம் தலைவராக யூனுஸ்கான் இருந்த நிலையில்அவருக்கு வாய்ப்பு தரவில்லை. பாஜக சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை. அதேநேரம் காங்கிரஸில் 15 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ராஜஸ்தானில் சுமார் 10 சதவிகித முஸ்லிம்கள் இருந்த காரணத்தால் காங்கிரஸ் முஸ்லிம் வேட்பாளர்களை கணிசமாக நிறத்தி உள்ளார். அதேநேரம் பாஜக துறவிகளை நிறுத்தி இருந்தது. பாஜகவின் இநதுதுத்துவா பார்முலா வெற்றி பெற்றதாக என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மற்ற 4 மாநிலங்களைவிட ராஜஸ்தானில் இரு கட்சிகளுக்குமே கடினமாக இருக்கும் என்றே தெரிகிறது. ஏனெனில் கடும் போட்டி இருக்கும் என்பதை முடிவுகள் காட்டுகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications