ஆப்கானிஸ்தான் "கிளை"க்கு இந்தியாவில் ஆளெடுக்கிறதா ஐஎஸ்ஐஎஸ்?
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தனது செயல்பாடுகளுக்காக இந்தியாவிலிருந்து ஆட்களை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூளைச் சலவைக்குள்ளாகி இந்தியாவிலிருந்து ஐஎஸ் அமைப்பில் சேரக் கிளம்புவோர் ஈராக் அல்லது சிரியாவுக்குப் போவதாகவே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதில் ஒரு திருப்பமாக ஆப்கானிஸ்தானுக்கு பலர் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிராவிலிருந்து மோசின் ஷேக், நூர் முகம்மது, வாஜித் ஆகிய 3 பேர் காணாமல் போனார்கள். அவர்கள் ஐஎஸ் அமைப்பில் சேரப் போயுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸாரின் தீவிர வேட்டையில் வாஜித் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

வாஜித்திடம் நடத்திய விசாரணையின்போது போலீஸாருக்கு புதிய தகவல் கிடைத்தது. அதாவது அவர் உள்ளிட்ட 3 பேரும் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ்ஸில் சேர முயன்றதாக தெரிவித்தார் வாஜித்.
அயஸ் சுல்தான் என்பவர் மூலமாக தாங்கள் ஆப்கானிஸ்தான் செல்ல முயன்றதாகவும் தெரிவித்தார் வாஜித். இவர் தனது நகைகளை விற்று சென்னைக்குப் போயுள்ளார். அங்கு டிராவல் ஏஜென்ட் ஒருவரைப் பார்த்து அவரிடம் பணத்தைக் கொடுத்து ஆப்கானிஸ்தான் செல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பினருக்கு ஆளெடுத்துத் தரும் வேலையை இந்த சுல்தான் செய்து வருகிறாராம். ஆப்கானிஸ்தானுக்கு இந்திய இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடச் செல்வதாக வந்துள்ள தகவல் உளவத்துறையினரை அதிர வைத்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications