உத்தரபிரதேசத்தில் ஆச்சரியம்.. பொத்தி பொத்தி செல்லமா வளர்த்தால்.. அந்த "எருமை" பண்ண வேலையை பாருங்க
கான்பூர்: வித்தியாசமான வழக்கு ஒன்று உத்திரபிரதேச போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளது.. அதைவிட வித்தியாசமான முறையில் இந்த வழக்கில் தீர்வும் காணப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அஸ்கரன்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நந்தலால் சரோஜ்.. இவர் ஒரு விவசாயி ஆவார். எனவே சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார்.

மாடுகள்: இந்த மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றாலும், அவைகள் தானாகவே வீடு வந்து சேர்ந்துவிடுமாம். அப்படித்தான், நந்தலாலின் ஒரு எருமை மாடு, சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், அப்படியே வழிதவறி காணாமல் போய்விட்டது.
இன்னும் எருமை மாடு வீட்டுக்கு வராததால், நந்தலால் பதறிப்போனார்.. தான் பாசமாக வளர்த்த எருமை என்ன ஆயிற்றோ என்று கலங்கிப்போனார்.. அந்த எருமை எங்கெல்லாம் செல்லுமோ, அங்கெல்லாம் தேடிச் சென்றார்.. ஆனால், எருமை மாடு எங்கியுமே கிடைக்கவில்லை..
இந்த மாடு காணாமல் போன, அடுத்த 3வது நாள், தன்னுடைய எருமைமாடு பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷ் என்ற இடத்தில் இருப்பது நந்தலாலுக்கு தெரியவந்துள்ளது.. இதனால் அந்த கிராமத்துக்கு நேரடியாகவே கிளம்பி சென்றார் நந்தலால். தன்னுடைய எருமையை அடையாளம் கண்டுகொண்டுமே மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த நந்தலால், அந்த எருமையை தன்னுடன் அழைத்துச்செல்ல முயன்றார்..
கறார்: ஆனால், திடீரென ஹனுமான் சரோஜ் என்பவர், அந்த எருமைநாடு தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தலால், ஹனுமானுடன் நீண்ட நேரம் வாக்கு வாதம் செய்தார். அந்த எருமை தன்னுடையதுதான் என்பதையும் புரியவைக்க முயன்றார். ஆனால், "எருமையினை கொடுக்க முடியாது, அது என்னுடையது" என்று கறாராக சொல்லிவிட்டார் ஹனுமான்.
இதனால் என்ன செய்வதென்றே தெரியாத நந்தலால், நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, இதுகுறித்து புகார் தந்தார்.. உடனே ஹனுமானும், தான் பாடுபட்டு வளர்த்து வந்த எருமையை நந்தலால் கேட்பதாக கூறி, அதே போலீஸி ஸ்டேஷ்னில் புகார் தந்தார்.
குழப்பம்: 2 பேருமே எருமை மாடு தன்னுடையது என்று உரிமை கொண்டாடியதால் போலீசார் குழம்பி போனார்கள்.. இதற்கு எப்படி தீர்வு காண்பது என்றும் தெரியாமல் போலீசார் விழித்தனர்.. எருமையின் உரிமையாளர் யார்? என்பதை போலீசாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
இறுதியில் 2 விவசாயிகளையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.. சம்பந்தப்பட்ட எருமை மாடும் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.. போலீசார், நந்தலால் மற்றும் ஹனுமான் இருவரையும் அழைத்து, அவரவர் கிராமத்திற்கு செல்லும் திசையை நோக்கி நிற்க வைத்தார்கள்.. இப்போது எருமை யார் பின்னால் செல்கிறதோ? அவரே எருமையின் உரிமையாளர் என்ற முடிவுக்கு வரலாம் என்று முடிவெடுத்தனர்.
மகிழ்ச்சி: அதன்படியே, எருமை மாட்டையும் நடுரோட்டில் விட்டனர்.. ஹனுமான், நந்தலால் இருவரையும் அவரவர் கிராமம் நோக்கி நிற்க சொன்னார்கள்.. அப்போது, நந்தலால் பின்னாடியே எருமை மாடு சென்றிருக்கிறது.
அதுமட்டுமல்ல, அந்த எருமை மாடு, நேராக நந்தலால் வீட்டுக்குள்ளும் நுழைந்தது.. இதையடுத்து, நந்தலாலே எருமையின் ஓனர் என்பது முடிவாகி, அவரிடமே எருமையை போலீசார் ஒப்படைத்திருக்கிறார்கள்.. இப்போது ஓனருக்கு செம மகிழ்ச்சி..! மாட்டுக்கு உரிமை கொண்டாடிய டுபாக்கூர் ஓனர் கைதாகியிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications