குஜராத்தில் ஒரு ஹத்ராஸ்... 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த 4 காமுகர்கள்!

Subscribe to Oneindia Tamil

ஜாம்நகர்: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸைப் போல குஜராத்திலும் 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து இடைவிடாமல் பலாத்காரம் செய்த செய்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசாரே எரித்த சம்பவம் நாட்டையே அதிரவைத்தது.

Hathras in Gujarat.. 15 year old girl gang raped by Four Youths

இன்னமும் ஹத்ராஸ் அதிர்வலைகள் ஓயாத நிலையில் குஜராத்தின் ஜாம்நகரிலும் இதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் ஜாம்நகர் மகாதேவ் நகரில்தான் 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்தே ஒரு கும்பல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தர்ஷன் பாட்டியா, மிலான் பாட்டியா, தேவ்கரன் காட்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4-வது குற்றவாளி மொஹித் பாட்டியா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இச்சம்பவத்துக்கு குஜராத் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ. ஜிக்னேஸ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் என பதிவிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+