7வது நாள் உண்ணாவிரதம்: ஹசாரே 4கி எடை குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கவலை

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவரது உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப் பட்டது. ஆனால், இம்முறை தனது நோக்கம் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர இருப்பதாக உறுதிமொழியுடன், தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி பகுதியில் உள்ள யாதவ் பாபா கோவிலில் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் ஹசாரே.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலேக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் நிறைவு பெற்று விடும். எனவே, நாளை இந்த மசோதா நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இன்று 7வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடரும் ஹசாரேவின் உடல்நிலையை நேற்று மருத்துவர்கள் பரிசோதித்தனர். தீவிர பரிசோதனைக்குப் பிறகு, ஹசாரேயின் உடல் எடை உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து 4 கிலோ குறைந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications