டெல்லியில் பயங்கரம்: பள்ளி மாணவியை 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது
டெல்லி: ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது ஆசிரியர் தன்னை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை செய்ததாக பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாவது படித்து வரும் சிறுமி சமீபத்தில் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 3 ஆம் வகுப்பு படித்தபோது அவருடைய பள்ளியில் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அப்போதிலிருந்தே இவரிடம் தகாத முறையில் நடந்ததாகவும், மேலும், தான் இவ்வாறு நடந்துகொள்வதை வெளியே சொன்னால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பயத்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட ஆசிரியர் கிட்டத்தட்ட 6 வருடங்களாக மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதுவரை இந்த விஷயத்தை தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் சிறுமி மறைத்து வந்துள்ளார். அந்த ஆசிரியர் தன்னை அந்த நகரத்தில் உள்ள பல்வேறு விடுதிகளுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் கடந்த 6 ஆண்டுகளில் தான் 175 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார் மாணவி.
மாணவியின் புகாரைத் தொடர்ந்து ஷைலேந்திரா என்னும் அந்த ஆசிரியரைப் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்தப்போது அந்த ஆசிரியர் சிறுமியின் வீட்டாரை தொடர்புக்கொண்டு, தான் சில ஆண்டுகள் கழித்து சிறுமியை மணந்துகொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, மாணவியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி குடும்பத்தார் சிறுமியை நிர்பந்தித்துள்ளனர்.
குடும்பத்தாரின் வற்புறுத்தலால் முதலில் புகாரை திரும்ப பெற்ற அந்த சிறுமி, தற்போது மீண்டும் அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்உ வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications