"அதென்ன" வாய்க்குள்ள.. பெட்ஷீட்டில் அப்பதான் குழந்தையை படுக்க வெச்சாங்க.. ஹய்யோ.. காதை கிழித்த கதறல்
மருத்துவமனையில் புகுந்து ஒரு மாத குழந்தையை வாயில் கவ்வியதுடன், அதை குதறி கொன்றுள்ளது ஒரு நாய்
ஜெய்ப்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு தேவை என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சங்கனேரியில் அரசு பெண்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.. இந்த மருத்துவமனையில், நாய் ஒன்று சுற்றி சுற்றி அந்த பகுதியிலேயே திரிந்து கொண்டிருந்தது.
வாயெல்லாம் ரத்தமாக காணப்பட்டது.. பிறகு ஏதோ ஒரு பொருளை கவ்வி பிடித்திருப்பதுபோல தென்பட்டது.. அதற்கு பிறகுதான் தெரிந்தது, இறந்துபோன 8 மாத சிசுவை கவ்வியபடி வலம் வந்ததை பார்த்து பொதுமக்கள் பதறிப்போய்விட்டனர்.

கவ்விய குழந்தை
நாயின் வாயில் கவ்வி இருப்பது குழந்தை என்பது முதலில் தெரியவில்லை. அதற்கு பிறகுதான், சிசுவை கண்டு பதறிப்போய், அந்த நாயை பின்னாடியே துரத்தி பிடிக்க முயன்றனர்.. மக்கள் கூட்டம் விரட்டி வருவதை கண்ட அந்த நாய்,கருவை அங்கிருந்த கட்டிடத்தின் வாசலில் போட்டுவிட்டு, மருத்துவமனை சுவரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.. பின்னர் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக லால் கோத்தி போலீசுக்கு தகவலை சொல்லவும் அவர்கள் விரைந்து வந்தனர்... குழந்தை கருவை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்...

ஒரு மாத குழந்தை
அந்த ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், அந்தக்கரு 8 மாத ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. ஆனால், அது யாருடைய குழந்தை என்று தெரியவில்லை.. இதுகுறித்து ஒரு போலீஸ் அதிகாரி சொல்லும்போது, "இறந்த குழந்தையின் குடும்பத்தினரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.. மருத்துவமனை வளாகத்திலுள்ள ஆக்ஸிஜன் ஃபேக்டரிக்கு பக்கத்திலேயே இந்த இறந்த கருவை கண்டுபிடித்தோம்.. ஆனாலும், அந்த இடத்தை சுற்றி எந்தவொரு சிசிடிவி கேமராக்களும் இல்லை. நவம்பர் 15-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளைப் பற்றி பதிவுசெய்த லிஸ்ட்டை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறோம்..

பலமான காயங்கள்
ஒருவேளை குழந்தை மருத்துவமனையில் இறந்து பிறந்திருக்கலாம்... அல்லது இறந்த கருவை திரும்ப எடுத்து செல்ல குடும்பத்தினர் தயங்கி, இங்கேயே பக்கத்தில் எங்காவது மண்ணில் புதைத்திருக்கலாம்... அதை நாய் தோண்டி எடுத்திருக்கலாம்... நாய் கடித்ததில் குழந்தையின் தலையில் பலமான காயங்கள் உள்ளன என்று கூறியிருந்தனர்.. இந்த நாயின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்தது.. இப்போது அதே ராஜஸ்தானில், அதேபோல ஒரு சம்பவம் நடந்து, அடுத்த அதிர்ச்சியை கிளப்பி விட்டுள்ளது.. ஜோத்பூர் சிரோஹி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது,

பெட்ஷீட்
இங்கு பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக, ஒருபெண், தன்னுடைய குழந்தையை தூக்கி கொண்டு வந்திருந்தார்.. அந்த ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதம்தான் ஆகிறது.. அதனால் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வராமல் கையோடு, மருத்துவமனைக்கு தூக்கி வந்திருந்தார்.. அப்போது, மருத்துவமனை வார்டு உள்ளே கணவரின் படுக்கைக்கு கீழேயே, தரையில் பெட்ஷீட்டை விரித்து குழந்தையுடன் அந்த பெண் தூங்கி கொண்டிருந்தார்.. அப்போதுதான், திடீரென உள்ளே நுழைந்துள்ளது ஒரு தெருநாய்.. குழந்தையை வாயில் கப்பென்று தூக்கி சென்றும்விட்டது..

2 தெருநாய்கள்
அதற்கு பிறகு, அந்த பெண் எழுந்து குழந்தையை காணவில்லை என்று பதறினார்.. மருத்துவமனை முழுவதும் தேடியலைந்தார்.. அதற்கு பிறகும் குழந்தை கிடைக்காததால், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் சொன்னார்.. உடனே அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை மருத்துவமனை ஊழியர்கள் சோதனை செய்தனர்.. அப்போதுதான், காசநோய் பிரிவுக்குள் 2 தெருநாய்கள் உள்ளே நுழைவதும், பின் சில நிமிடங்களிலேயே, ஒரு நாய் குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு ஓடுவதும் அதில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.. அவர்களும் விரைந்து வந்து குழந்தையை அந்த பகுதி முழுக்க தேடினர்..

சிசு அஜாக்கிரதை
அந்த மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை இறந்துகிடந்ததை கண்டுபிடித்தனர்.. நாய்கள் கடித்து குதறிய நிலையில் அந்த குழந்தை இறந்து கிடந்தது.. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிரோஹி மாவட்ட கலெக்டர், உரிய விசாரணையை நடத்தி அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கைக்குழந்தையை நாய் தூக்கிச்சென்று கடித்துக் கொன்ற விவகாரம், ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சிசிடிவி கேமரா இருந்தும், இவ்வளவு அஜாக்கிரதையாக அரசு மருத்துவமனைகள் செயல்படுகிறதே என்று அதிர்ச்சி கலந்த கேள்வியை எழுப்பி வருகிறார்கள் அம்மக்கள்..!!












Click it and Unblock the Notifications