இருட்டு ரூமில்.. பெண்ணை கட்டிப்பிடித்து.. குரூர போலீஸ்.. ஜன்னலில் கதறிய உறவுகள்.. யோகிக்கு சிக்கல்?
இளம்பெண்ணை கட்டிப்பிடித்து தாக்கிய போலீசுக்கு எதிரான கண்டனங்கள் கிளம்பி உள்ளன
கான்பூர்: இளம்பெண்ணை இருட்டு அறையில் கட்டிப்பிடித்து டார்ச்சர் செய்கிறார் ஒரு போலீஸ்காரர்.. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது? யார் அந்த போலீஸ்?
இந்தியாவிலேயே அதிக அளவு பாலியல் கொடுமைகள், யோகியின் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.. பெண்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இதனால், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் கிடைப்பதில்லை..

தலித் பெண்கள்
பாலியல் அக்கிரமங்களால் ஏராளமான தலித் பெண்களின் உயிர்களும் பறிபோய் கொண்டிருக்கின்றன.. இந்த தொடர் வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தாலும், தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் உபியில் எடுக்கப்படாமலேயே உள்ளது. அந்தவகையில், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. சமீபகராம்பூர் மாவட்டத்தில், பெண் போலீஸை, கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தது.. போலீஸ்காரர் ராம்வீர் யாதவ், மருத்துவமனை மேனேஜர் வினோத் யாதவ் ஆகியோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்..

பொறுப்பு
இந்த சம்பவம் நடந்தபோது, ராம்பூரில் துணைக்கண்காணிப்பாளராக கிஷோர் ஷர்மா என்பவர் பொறுப்பில் இருந்தார்... ஆனால், பலாத்காரம் செய்தது யார் என்று தெரிந்தும்கூட, அவர்கள் மீது டிஎஸ்பி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அதற்கு பதிலாக, இப்படி ஒரு கேஸையே மூடி மறைக்க, ரூ.5 லட்சத்தை லஞ்சமாக பெற்றுள்ளார்.. லஞ்சம் பெறும் வீடியோ ஆதாரங்களும் வெளியான நிலையில், பெண்ணை சீரழித்த ராம்வீர் யாதவ், வினோத் யாதவ் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அம்மாநில அரசு உத்தரவிட்டது...

கான்ஸ்டபிள்
டிஎஸ்பி கிஷோர் ஷர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டேயிருந்தது.. காரணம், கிஷோர் ஷர்மா ஏராளமான வழக்குகளில் லஞ்சம் வாங்கி, அந்த கேஸ்களை எல்லாம் மூடி மறைத்தாராம்.. நாலாபக்கமும் தன்னுடைய அரசுக்கு நெருக்கடிகள் சூழவும், சப் இன்ஸ்பெக்டராக, அவரை பதவி இறக்கம் செய்து முதல்வர் ஆதித்யநாத் கடந்த மாதம் அதிரடியாக உத்தரவிட்டார். அதேபோல, காவல் உதவி ஆய்வாளராக இருந்த, ராம்வீர் யாதவ் போலீஸ் கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

இருட்டு ரூமில்
இந்த உத்தரவு சம்பவத்தை யோகி அரசு, தன்னுடைய ட்விட்டரிலும் பகிர்ந்திருந்தது, கண்டிப்பு மிகுந்த அரசு போல காட்டிக்கொண்டது.. ஆனால், நிலைமை உபியில் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.. இதோ இன்னொரு கொடுமை நடந்துள்ளது. கான்பூர் மாவட்டத்தில் கக்வான் என்ற பகுதி உள்ளது.. இந்த பகுதியில் வசித்து வரும் சப் இன்ஸ்பெக்டர் இளம்பெண் ஒருவரை போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரூமுக்குள் அழைத்து சென்று உள்பக்கமாக கதவை பூட்டிவிடுகிறார்.. அந்த ரூம் இருட்டாக இருக்கிறது.. இருட்டு அறையில் பெண்ணை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்..

ஜன்னல் கம்பிகள்
அந்த பெண்ணை பின்பக்கமாக நின்று இரு கைகளாலும் கட்டிப்பிடித்து கொண்டு, டார்ச்சர் செய்கிறார்.. தன்னை விட்டுவிடும்படி அப்பெண் கெஞ்சுகிறார். ஆனால், போலீஸ்காரர் விடவில்லை.. மோசமாக தாக்கி தொடர்ந்து அடிக்கிறார்... பெண்ணின் உறவினர்களும் அந்த பகுதி மக்களும், ரூமுக்கு வெளியே ஜன்னல் வழியாக கத்தி கதறி கெஞ்சியுள்ளனர்... அந்த பெண் என்ன தவறு செய்தாள்? ஏன் இப்படி அடிக்கிறீங்க?" என்று அவர்கள் கூச்சலிட்டனர்.. அப்போதும், அந்த போலீசுக்கு மனம் இரங்கவில்லை.. பெண்ணை ஒரு கையால் கட்டிப்பிடித்து கொண்டே, மறுகையால் அவரது கழுத்தை இறுக்கி தாக்குகிறார்..

அராஜகம்
ஒருகட்டத்தில், அந்த பெண், போலீஸின் பிடியில் இருந்து தப்பி விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறார்.. ஆனால் பெண்ணை விடாமல் அடிக்கும் அந்த போலீஸ், "உங்களை போன்ற ஆட்கள் போலீசாரிடம் சரியாக நடப்பதில்லை, நீங்கள் எப்போதுமே தவறுதான் செய்கிறீர்கள்" என்று தன்னுடைய செயலை நியாயப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோவும் வெளியாகி உள்ளது.. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்து, கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் போலீஸாரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் காட்டமாக வலியுறுத்தியுள்ளது.

பெருத்த மௌனம்
அந்த ட்விட்டர் பதிவில், "கான்பூர் காவல்துறையின் இந்த செயல் வெட்கக்கேடானது. யோகி அரசின் காவல்துறை மக்கள் மத்தியில் செய்யும் அராஜகம் நாள்தோறும் வாடிக்கையாகி விட்டது. ஆனால், முதல்வரோ, இதற்கு மவுனம் சாதிக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று மிக முக்கிய கோரிக்கையையும் விடுத்துள்ளது. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், ராமராஜ்ஜியம் கொண்டு வரப்போவதாக சொல்லி கொண்டிருக்கும் யோகி அரசு, இதற்கும் நடவடிக்கை எடுக்குமா? என்று தெரியவில்லை.. பார்ப்போம்!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications