அவசரப்பட்டு தூக்கில் தொங்கிய பிரியங்கா! காதலி சடலத்தை திருமணம் செய்த சன்னி! மனதை உருக்கிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறந்த காதலியின் நெற்றியில் குங்குமம் வைத்து இளைஞர் திருமணம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்சலாவின் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சன்னி. இவர் அங்கு செல்போன் பழுதுபார்க்கும் கடை மற்றும் ஆபரண கடையும் வைத்துள்ளார்.

lucknow love

அதே பகுதியில் வாடகைக்கு வீடு பார்க்க சென்ற போது பிரியங்கா மாதேரியா (23) என்ற இளம் பெண்ணை கண்டார். பார்த்ததுமே இருவருக்கும் பிடித்து போய் பழகினர். இதனால் அடிக்கடி சந்தித்தனர். நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசியதால் காதல் மலர்ந்தது. 3 ஆண்டுகளாக காதலித்த இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இந்த நிலையில் சன்னி மற்றும் பிரியங்கா இருவரும் நேற்று முன் தினம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் சன்னி, பிரியங்காவை திட்டி விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றார்.

இந்த விரக்தியில் இருந்த பிரியங்கா, அழுதுக் கொண்டே வீட்டுக்கு சென்றார். அங்கு திரும்ப திரும்ப சன்னியுடன் சண்டையிட்ட சம்பவம் நினைவுக்கு வந்துக் கொண்டிருந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த பிரியங்கா, அவசரப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் பிரியங்கா நீண்ட நேரமாக வெளியே வராததால் பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த நிலையில் சன்னி, தகவலறிந்து வந்து பிரியங்காவின் உடலை பார்த்து கதறினார்.

அவருடைய வீட்டில் பிரியங்காவை சவப்பெட்டியில் வைத்திருந்தனர். அப்போது அவருடைய உறவினர்களிடம் சென்ற சன்னி, பிரியங்காவுக்கு தாலி கட்டி தனது மனைவியாக்க வேண்டும் என கேட்டார். உறவினர்களும் கண்ணீருடன் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து உள்ளூர் பூசாரி வரவழைக்கப்பட்டார். அவர் திருமணத்திற்கான மந்திரங்களை சொன்னார். அப்போது சன்னி, பிரியங்காவின் நெற்றியில் குங்குமமிட்டு மாலை போட்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சவப்பெட்டியை 7 முறை வலம் வந்து இறுதிச் சடங்குகளை செய்தார். காதலியின் சடலத்துக்கு அருகே அமர்ந்து கொண்டு கதறினார். இந்த திருமண காட்சிகளை செல்போனில் வீடியோவாக சிலர் பதிவு செய்தனர். பின்னர் பிரியங்காவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து சன்னி கூறியிருப்பதாவது: நான் பிரியங்காவை உயிருக்கு உயிராக காதலித்தேன். நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டு எங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கலாம் என இருந்தேன். ஆனால் அதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. அதனால் அவருடைய சடலத்திற்கு குங்குமமிட்டு மனைவியாக்கிக் கொண்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+