நார் நாராக கிழிக்கப்பட்ட பெண்.. ஆற்றில் குளிக்க போனாராம்.. அப்பதான் "அது" அங்கே வந்திருக்கு.. கொடுமை

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இதை பார்ப்பவர்கள் கதறி துடிக்கிறார்கள்.. என்ன நடந்தது அந்த ஆற்றங்கரையில்?

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Heartbreaking Video and what happened to the Women near Odisa River

சில நேரத்தில், அரிய சம்பவங்கள் அல்லது நகைச்சுவை தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்.. அதிலும், பாம்பு வீடியோ என்றாலே, காண்போர்களுக்கு அள்ளு கிளம்பிவிடும்..

இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண், 40, 50 கருநாகங்களை, பாத்ரூமில் வைத்து, தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து கொண்டிருந்தார்.. அதேபோல, ஒரு பெண்ணின் காதுக்குள் இருந்து பெரிய பாம்பு ஒன்றை டாக்டர்கள் ஆபரேஷன் செய்து எடுத்தார்கள். இணையத்தில் வீடியோக்கள் என்றாலே, நகைச்சுவை மட்டுமல்லாமல் இப்படியான பயங்கரங்களும் உலா வரத்தான் செய்கின்றன. இதோ இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வீடியோ அதிர்ச்சி: வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கிறது அந்த வீடியோ.. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில், பிருபா என்ற ஆறு ஓடுகிறது.. இந்த ஆற்றில் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தார்... அப்போது அந்த ஆற்றிலிருந்து முதலை ஒன்று, திடீரென தலையை தூக்கி பார்த்தது.. அத்துடன், குளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணையும் தண்ணீருக்குள் இழுத்து சென்று, ஒரேடியாக கொன்று தீர்த்துவிட்டது..

கரையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.. நீச்சல் தெரியாமல் சிக்கி கொண்டால், தண்ணீரில் இறங்கி காப்பாற்றலாம்.. ஆனால், முதலையே இழுத்து கொண்டுபோனால், என்ன செய்வதென்று தெரியாமல் அத்தனை பேரும் கரையிலேயே நின்றுகொண்டு பதறி கதறி துடித்தனர்.. ஒருசிலர் இந்த கொடூரத்தை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டனர்.. சிலர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் சொன்னார்கள்..

தீயணைப்பு படையினரும், உடனடியாக விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.. ஆனால், முதலை கவ்வியபோதே அந்த பெண்ணின் உயிர் போய்விட்டது.. நீரில் அந்த பெண்ணின் எஞ்சிய உடலைதான் மீட்க முடிந்திருக்கிறது.

Heartbreaking Video and what happened to the Women near Odisa River

பதற செய்யும் வீடியோ: சம்பந்தப்பட்ட பெண் யார்? எங்கே இருக்கிறார்? என்ற விவரங்கள் குறித்த விசாரணை நடந்தது. அந்த பெண் ஜஜ்பூர் மாவட்டம் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவராம்.. அவரது பெயர் ஜோத்ஸனா ராணி.. 35 வயதாகிறது.. முதலையிடம் சிக்கிய பெண்ணின் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்து வருகிறது.

அதாவது, முதலையின் தாடைகளுக்கு நடுவில் அந்த பெண் வசமாக சிக்கியிருக்கிறார்.. தாடைகளில் அந்த பெண்ணை இறுக்கமாக பிடித்துக்கொண்டுதான், தண்ணீருக்குள் முதலை இழுத்து சென்றுள்ளது. அதற்கு பிறகு நார் நாராக கிழித்தெறிந்து பெண்ணை விழுங்குகிறது..

எச்சரிக்கை பலகை: இந்த ஆற்றில் முதலைகள் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரியாதா? தெரிந்தே குளிக்க வந்தார்களா? அல்லது எச்சரிக்கை பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதா? குளிப்பதற்கான அனுமதியை தந்திருக்கிறார்களா? இதையெல்லாம் யார் கண்காணிப்பது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால், கண்ணெதிரே ஒரு உயிர் கரைந்து காணாமல் போய்விட்டது.

எச்சரிக்கை: தீயணைப்பு படையினர் வந்து சடலத்தை மீட்டபோது, அந்த பெண்ணின் தலையும் இல்லையாம், கால்கள் இரண்டுமே இல்லையாம்.. மிச்ச உடலைதான் கொண்டுவந்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சடலத்தை பார்த்து பொதுமக்கள் அலறி துடித்து அழுதார்களாம். பெண் குளிக்க செல்லும்போது, அந்த முதலை ஏற்கனவே நீருக்குள் பதுங்கி இருந்திருக்கலாம் என்கிறார்கள்.. அந்த வீடியோவில், பெண்ணை துண்டு துண்டாக கிழித்தெடுத்து விழுங்குவதும் பதிவாகி உள்ளது.

இந்த உயிர்பலியை தொடர்ந்து, முதலை நடமாட்டம் இருப்பதால் ஆற்றில் குளிக்க செல்பவர்கள் கவனமாக இருக்கும்படி மாவட்டம் நிர்வாகம் தரப்பில் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+