ஆந்திரா, தெலுங்கானாவில் வெயில் கொடுமைக்கு 220 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வாட்டி எடுக்கும் கொடும் வெயிலுக்கு இதுவரை 220 பேர் பலியாகி உள்ளனர்.

கடலோர ஆந்திராவில் உள்ள விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், நெல்லூர், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் முடிந்த பின்னரும் கூட 8 டிகிரி வரை கூடுதலாக வெயில் வெளுத்துகிறது.

Heat wave claims 220 lives in AP, Telangana

ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 220 பேர் வெயில் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். இதில் வடக்கு ஆந்திராவில்தான் அதிகம் பேர் பலியாகியுள்ளனர். அங்கு பலியானோர் எண்ணிக்கை 77.

இதேபோன்று தெலுங்கானா மாவட்டங்களிலும் வெயில் பலரை பலியெடுத்துள்ளது. இந்நிலையில் மேலும் 48 மணி நேரத்துக்கு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று விசாகப்பட்டினம் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கொடும் வெயிலுக்கு பலியானோரில் முதியோர், குழந்தைகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+