சுட்டெரிக்கும் கோடை வெயில்.. ஆந்திரா, தெலுங்கானாவில் 153 பேர் சாவு!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடும் கோடை வெயிலுக்கு 153 பேர் பலியாகியுள்ளனர்.
கத்திரி வெயில் நாடெங்கும் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்திலும், ஆரம்பத்தில் சற்று மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வறுக்கிறது.

ஆந்திரா, தெலுங்கானாவில், மழையும் இன்றி வெயில் வறுத்ததால், தாக்குப்பிடிக்க முடியாத 153 பேர் உயிரிழந்துள்ளனர். அதுவும் கடந்த 2 நாட்களில் மட்டும்.
இதில் தெலுங்கானாவில் 73 பேரும், ஆந்திராவில் 80 பேரும் அடங்கும். அதிலும், ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் 40 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஆந்திராவின் பல மாவட்டங்களிலும் அதிகபட்ச வெப்பம் 47 டிகிரி செல்சியசாக ுள்ளது.












Click it and Unblock the Notifications