Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு.. அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பேர் சிக்கித் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் 21 பேர் பனிச்சரிவில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார். இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பனிலிங்கம் 3888 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் இருப்பதால் இங்கு கடுங்குளிர், உறை பனி உள்ளிட்டவைகளுக்கு இடையே சிரமமான முறையில் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

Heavy rain in Jammu Kashmir which leads Tamil people stranded in various places

அமர்நாத் பனிலிங்கத்தை குறிப்பட்ட சீசன்களில் மட்டுமே பார்க்க முடியும். அந்த வகையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இருக்கும். அதன் பிறகு அடுத்த ஆண்டுதான் பனிலிங்கத்தை பார்க்க முடியும்.

இந்த காலகட்டத்தில்தான் வானிலை ஓரளவுக்கு இருக்கும் என்பதால் இந்த சீசனில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த சீசனில் கூட இயற்கைச் சீற்றங்களால் அமர்நாத் யாத்திரை திடீரென ரத்தாகும். பின்னர் மீண்டும் தொடங்கும். இப்படியான நிலையில் இந்த முறை ஜம்மு காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து அமர்நாத் பனிலிங்க தரிசனத்தில் தடை ஏற்பட்டது. அமர்நாத் யாத்திரைக்காக ஜம்முவை விட்டு வழக்கமாக அதிகாலையில் 3.45 மணி முதல் 4.30 மணிக்குள்ளாக புறப்பட்டு விடுவார்கள்.

அப்படியிருக்கும் போது இந்த யாத்திரையில் தடை ஏற்பட்டதால் 15 ஆயிரம் பக்தர்கள் ஜம்மு மற்றும் பல்வேறு இடங்களில் சிக்கித்தவித்து வருகிறார்கள். ஜம்முவை நோக்கி செல்லும் காசிகுந்த் பகுதியிலும் நிறைய பேர் சிக்கியுள்ளனர். அது போல் ஜம்முவின் பகவதிநகர் அடிவாரத்தில் உள்ள முகாமில் 8000 பேர் சிக்கித் தவித்து வருகிறார்கள். ராம்பன் மாவட்டத்தில் சந்தர்கோட் மலையடிவாரத்தில் 6000 யாத்ரீகர்களும் கத்துவா மற்றும் சம்பா முகாம்களில் 2000 பக்தர்களும் சிக்கியுள்ளனர்.

சாலை முழுவதும் சேதமடைந்துவிட்டதால் இவர்களால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போல் அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பேர் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதியடைகிறார்கள். கடுங்குளிரால் பலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது என தமிழர்கள் வீடியோ மூலம் தெரிவிக்கிறார்கள்.

தங்களை எப்படியாவது தமிழக அரசு மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். நாளுக்கு நாள் மழையின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பே அவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் இந்த யாத்திரை 62 நாட்கள் இந்த யாத்திரை நடக்கும். ஜம்மு மலையடிவாரத்தில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி முதல் 43,833 யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரைக்கு 7 குழுக்களாக சென்றுள்ளனர். இங்கு கனமழை, மோசமான வானிலை, பனிச்சரிவு ஆகியவற்றால் ஜம்முவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+