பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை: இருளில் மூழ்கிய பெங்களூர்
பெங்களூர்: திங்கட்கிழமை மாலை பெங்களூரில் திடீர் என்று கன மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் திங்கட்கிழமை மாலை 6.30 மணி அளவில் திடீர் என்று வானம் இருண்டு பலத்த காற்று வீசியது. வானத்தில் நடந்த மாற்றத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இருள் சூழ்ந்தது.
இதையடுத்து கனமழை பெய்தது.

இருள்
மாலை 6.30 மணிக்கு வானம் இருண்டதால் கும்மிருட்டானது. இதையடுத்து மின்வெட்டு ஏற்பட்டது. இருளால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளில் நடந்து சென்றவர்கள் அவதிப்பட்டனர்.

கனமழை
வானம் இருண்ட வேகத்தில் கன மழை பெய்தது. மேலும் மழையுடன் இடி, மின்னலும் சேர்ந்து கொண்டது.

போக்குவரத்து
போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்போன பெங்களூரில் கனமழை, பலத்த காற்றால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மரங்கள்
பெங்களூரில் வீசிய பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்த திடீர் மழையால் சில இடங்களில் விடிய, விடிய மின்வெட்டு நிலவியதால் மக்கள் அவதிப்பட்டனர். இரண்டு மணிநேரத்தில் 20 முதல் 30 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications