மூணாறில் சூறாவளி காற்று- மழை: சாலைகளில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மூணாறு: தமிழக-கேரள எல்லையான மூணாறில் கனமழையும்,சூறாவளி காற்றும் வீசி வருகிறது. பலத்த மழை காரணமாக மூணாறு-மதுரை மலைச்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கேரள மாநிலம் மூணாறில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் முக்கிய சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து சாலையில் விழுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்து வருகிறது.

மூணாறில் இருந்து கொச்சி, தேனி, போடி, மதுரை, குமுளி மற்றும் நெடுங்கண்டம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மலைச்சாலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதனால் மலைச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாறை விழுந்த இடங்களை பார்வையிட்டனர். அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பாதையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
சாலைகளில் விழுந்த பாறைகள் பெரிய அளவில் இருப்பதால் அவற்றை பொக்லைன் எந்திரம் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் இன்னும் சில தினங்களுக்கு இந்த சாலைகளில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications