ஜெ. தீர்ப்பு எதிரொலி: கர்நாடக ஹைகோர்ட்டில் 1,000 போலீசார் குவிப்பு, 5 அடுக்கு பாதுகாப்பு!
பெங்களூரு: ஜெயலலிதா தீர்ப்பு வழங்கப்படும் கர்நாடக ஹைகோர்ட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், பெங்களூருவில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர்.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட்டுக்குள் அவர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கோர்ட்டை சுற்றி 1 கி.மீ தூரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேருக்கு மேல் அங்கு நிற்க முடியாது.

ஹைகோர்ட் வளாகத்தில், 2 டி.சி.பி, 20 ஏ.சி.பி, கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின் 10 பட்டாலியன் குழு, ஆயுதப்படையின் 3 பட்டாலியன் குழு உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்று நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, 'ஒன் இந்தியாவிடம்' தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய மண்டல போலீஸ் துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.
கோர்ட்டின் பல பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன. மோப்ப நாய்களுடன் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications