சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியது.. பைலட்டுக்கு பறந்த ATC எச்சரிக்கை.. பெரும் பதற்றம்!
விசாகப்பட்டினம்: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அல்லூரி சீதாராமன் ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஒரு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

விசாகப்பட்டினத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் புறப்பட்ட நிலையில், அவர் சென்ற ஹெலிகாப்டர் வழிதவறிச் சென்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஹெலிகாப்டரின் பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்து தகவல் அனுப்பினர்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியது. ஹெலிகாப்டரின் விமானிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மீண்டும் சரியான பாதையில் ஹெலிகாப்டர் பயணத்தை தொடர்ந்தது. தொடர்ந்து, பாதுகாப்பாக அரக்கு பகுதியில் தரையிறங்கியது.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு இருந்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் தற்போது வெளியில் உள்ளார். ஜாமீன் உத்தரவை எதிர்த்து ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications