தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஜேஎம்எம்.. ஜார்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்
Recommended Video
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அமோக முன்னிலை பெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் தான் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். காங்கிரசும் இதையே கூறியுள்ளது.
மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் குறைந்தது 41 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியை பிடிக்க முடியும். அந்த வகையில் 45 தொகுதிகளுக்கும் மேலாக காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை பெற்று அசத்தியது.

30 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே அதன் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக அரியணை ஏற உள்ளார்.
முன்னதாக, இன்று காலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஆர்ஜேடி தலைவர்களில் ஒருவரான, தேஜஸ்வி யாதவ் அளித்துள்ள பேட்டியில், ஹேமந்த் சோரன் தலைமையில் தான் நாங்கள் தேர்தலில் களம் கண்டோம். எனவே எங்கள் கூட்டணியின் சார்பில் அவர் தான் முதல்வராக பதவி ஏற்பார். மகாகத்பந்தன் மிகப்பெரிய வெற்றியை அடைய போகிறது என்று தெரிவித்துள்ளார்.
Hemant Soren, Jharkhand Mukti Morcha (JMM) in Ranchi: Today a new chapter will begin for this state. I want to assure everyone that their hopes will not be broken irrespective of their caste, creed, religion and profession. #JharkhandElectionResults pic.twitter.com/vIONxhl98K
— ANI (@ANI) December 23, 2019
மகாகத்பந்தன் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஹேமந்த் சோரன் விளங்கி வருகிறார். அவரால்தான், கூட்டணியில் உள்ள, காங்கிரசுக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவை வீழ்த்த முடிந்துள்ளது. எனவே எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஹேமந்த் சோரன் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் முதல்வராக அரியணை ஏற போவது உறுதியாகி விட்டது.
இன்று மாலை நிருபர்களிடம் பேட்டியளித்த ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர், நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்பேன். நாளைக்குள், அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications