உடைமாற்றும் அறையில் கேமரா: உ.பி.யில் 45 கடைகளுக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உடை மாற்றும் அறையை நோக்கி வைக்கப்பட்டுள்ள கேமராக்களின் இடத்தை உடனே மாற்றுமாறு 45 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவாவின் கன்டோலிம் நகரில் உள்ள ஃபேப்இந்தியா கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டுபிடித்தார். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கடைக்கு சீல் வைத்து ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hidden cameras: 45 stores served notice in UP

இந்த சம்பவத்தை அடுத்து மால்கள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தி கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறு உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் லக்னோ நகரில் உள்ள பல்வேறு மால்கள், கடைகளில் சோதனை நடத்தினர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

லக்னோவில் உள்ள முக்கிய மால்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக எதுவும் சிக்கவில்லை. ஆனால் 45 கடைகளில் உள்ள கேமராக்கள் உடைமாற்றும் அறையை நோக்கி உள்ளது. அவற்றின் இடத்தை மாற்றுமாறு கூறி 45 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கடைகளில் ஃபன், ஃபீனிக்ஸ் மற்றும் சஹாராகஞ்ச் மால்களில் தலா 10 கடைகளும், வேவில் 12 கடைகளும், எஸ்ஆர்எஸ்ஸில் 3 கடைகளும் அடக்கம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+