பழங்குடி இனத்தவர் தொகுதிகளில் கோலோச்சிய ''நோட்டா''.. பீதியில் கட்சிகள்!
டெல்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா பட்டன் அதிகளவு பழங்குடி இனத்தவர் தொகுதிகளிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் பீதியை கிளப்பி விட்டிருக்கிறது.
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 'நோட்டா' என்ற பட்டனும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் ஏற்காடு இடைத்தேர்தலிலும் நோட்டாவுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் இதற்கான பிரசார இயக்கங்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மொத்தம் 15 லட்சம் பேர் நோட்டாவை பயன்படுத்தியது அரசியல் கட்சிகளிடையே அதிரவைத்தது. இவற்றில் பெரும்பாலானவை பழங்குடி இன தொகுதிகளில்தான் என்பது அரசியல்வாதிகளிடத்தில் பீதியை இன்னமும் அதிகரித்திருக்கிறது.
ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவு நோட்டா பதிவானது பிந்த்வாரா அபு தொகுதியில்தான். எஸ்.டி தொகுதியான இதில் 5.75% நோட்டா வாக்குகள் பதிவானது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 30,855 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வீழ்த்தினார். இதேபோல் சோரசி தொகுதியில் 5% நோட்டா வாக்குகள் பதிவாகின.
பழங்குடி தொகுதிகளில்..
ராஜஸ்தானின் துங்கர்புர், அஸ்புர், பகிடோரா, கிஷோராய்பதான், ரியோதர், ஜதோல், கோகுண்டா ஆகிய பழங்குடி தொகுதிகளிலும் 3.87%க்கும் மேல் நோட்டா வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
45 தொகுதிகளின் வெற்றி தோல்வி..
சத்தீஸ்கரிலோ நோட்டா வாக்குகளானது 45 தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது. அந்தளவுக்கு பழங்குடி தொகுதிகளில் நோட்டாவில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்திருக்கின்றனர். சத்தீஸ்கரில் மொத்தம் 4.6% வாக்காளர்கள் நோட்டாவை பயன்படுத்தியிருக்கின்றனர்.
ம.பி.யில் 1.9% நோட்டா
மத்திய பிரதேச மாநிலத்தில் 1.92% நோட்டா வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. டெல்லியிலோ 0.63% நோட்டா வாக்குகள் பதிவாகி இருகின்றன.
நோட்டாவைவிட மார்ஜின் கம்மி..
மத்திய பிரதேசத்தில் பல தொகுதிகளில் 200,300 வாக்குகளில் தோல்வியைத் தழுவிய வேட்பாளர்கள் இருக்கின்றனர். இந்த தொகுதிகளில் எல்லாம் நோட்டாவில் விழுந்தவை ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications