மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சூரத் மதரஸா பள்ளி.. இந்துக்களும் இணைந்து படிக்கும் ஆச்சரியம்!
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில், ஒரு மதரஸா சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் இந்து சமூக பிள்ளைகளும் அதிக அளவில் படிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது. மத நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் வகையிலான இந்த நிகழ்வு அனைவரையும் மகிழவும் வைத்துள்ளது.
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் சூரத் நகர் பல்வேறு மத மக்கள் வாழும் நகரமாகும். இங்கு பல்வேறு விதமான மதத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இத்தனை மதத்தினர் வசித்தாலும் கூட அவர்களுக்கிடையே நல்ல நல்லிணக்கம் காணப்படுவது வியப்புக்குரியது, பாராட்டுக்குரியதாக உள்ளது.

இங்குள்ள மதரஸா சார்பில், உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் இந்து சமூக பிள்ளைகளும் சேர்ந்து படிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பள்ளியானது, மோட்டாவரச்சா என்ற பகுதியில் உள்ளது.
இது இஸ்லாமியர்களுக்கான கல்வி நிலையமாக இருந்தபோதிலும், இங்கு இந்து சமூக பிள்ளைகளும் கணிசமாக பயில்கின்றனர். இந்தப் பள்ளியானது 1905ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இங்கு பல்வேறு வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
அனைத்து மதங்கள் குறித்த பாடங்களும் இங்கு கற்பிக்கப்படுவது இன்னொரு சிறப்பாகும். பல்வேறு மதங்களில் காணப்படும் ஒற்றுமைகள், நல்ல விஷயங்களை இங்கு சொல்லிக் கொடுப்பது இன்னொரு முக்கிய அம்சமாகும்.
அனைத்து மதங்களையும் புரிந்து கொண்டு, மதங்கள் சொல்லும் நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இங்குள்ள பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தருவது இந்த பள்ளியின் மகத்துவமாகும்.
இதுகுறித்து வைஷாலி என்ற மாணவி கூறுகையில், இங்கு நாங்கள் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து படிக்கிறோம். இரு மத பண்டிகைகளையும் நாங்கள் இணைந்தே கொண்டாடுவோம். இரு மத நிகழ்வுகளையும் இணைந்தே செய்வோம். ராக்கி பண்டிகையையும் சேர்ந்தே கொண்டாடுவோம்.
இந்து என்றும் முஸ்லீம் என்றும் யாரும் கிடையாது. அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்று எங்களுக்கு ஆசிரியர்கள் போதித்துள்ளனர் என்றார்.
ஹுனேனா என்ற மாணவி கூறுகையில், நாங்கள் இந்து மாணவ மாணவியருடன் இணைந்தே படிக்கிறோம். எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. இந்துக்களும் நம்மவர்களே என்று எங்களுக்கு ஆசிரியர்கள் போதித்துள்ளனர். எங்களுக்குள் சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் ஆசிரியர்கள் போதித்துள்ளனர். யாரும் யாரையும் பாரபட்சமாக நடத்தக் கூடாது, பரஸ்பரம் மதிக்க வேண்டு்ம் என்றும் ஆசிரியர்கள் போதித்துள்ளனர் என்றார் அவர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications