இந்துக்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
பாட்னா: இந்து தம்பதியர் அதிக அளவு குழைந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் அமைச்சர் கிரிராஜ் சிங். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிராஜ் சிங், இந்தியாவில் இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்துக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ராமர் கோயில் கட்ட வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் ராமர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் எப்படி ராமர் கோயில் கட்ட முடியும்.

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் தொடர்ந்து இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தேச பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது 1 சதவீதமாக குறைந்துள்ளனர். அப்போது இந்தியாவில் இந்துக்கள் 90 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் இருந்தனர்.
ஆனால் தற்போது முஸ்லிம்கள் 24 சதவீதம், இந்துக்கள் 76 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே இந்து மக்கள் தங்கள் மக்கள் தொகையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்துக்கள் அதிக குழைந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முன்பு ஒரு முறை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நைஜீரிய பெண்ணை திருமணம் செய்திருந்தால், அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்றிருக்குமா? என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் தனது பேச்சுக்கு கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவித்தது நினனைவு கூறத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications