காளைகளை "அடக்க" மல்லுக்கட்டும் பீட்டா.. மறுபக்கம் உலகிலேயே மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா லீடிங்!
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக கடுமையாக முட்டி மோதி வருகிறது பீட்டா. ஆனால் மறுபக்கமோ உலகிலேயே மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வரும் செய்தி வெளியாகியுள்ளது. இப்படி கொத்துக் கொத்தாக கறி ஏற்றுமதி செய்வதை தடுக்கவோ, முடக்கவோ இந்த பீட்டா பாய்ஸ் ஒரு குரலும் கொடுக்காமல் கம்மென்று இருப்பதும் ஆச்சரியமாகவே உள்ளது.
பல முன்னணி நாடுகளை விட இந்தியாவிலிருந்துதான் அதிக அளவில் மாட்டுக் கறி ஏற்றுமதியாகிறதாம். இது ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் தரும் தகவலாக உள்ளது.
பசுக்களை புனிதம் என்று கூறும் நாட்டிலிருந்துதான் மாட்டுக்கறி அதிக அளவில் ஏற்றுமதியாகிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது.

2015ல்
2015ம் ஆண்டில் இந்தியாதான் அதிக அளவில் மாட்டுக் கறியை ஏற்றுமதி செய்த நாடாகும் என்று அமெரிக்க விவசாயத்துறை புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.

பிரேசில் ஆஸ்திரேலியா பின்னாடிதான்
நமக்குப் பின்னால்தான் பிரேசில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வருகின்றன. இவர்களை விட இந்தியாதான் முதலிடத்தில் முந்திக் கொண்டு நிற்கிறது.

எருமைதான் ஜாஸ்தி
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாட்டுக் கறியில் எருமை மாட்டுக் கறிதான் அதிகமாம். அமெரிக்கத் தரத்துக்கேற்ப எருமைக் கறியை பக்குவப்படுத்தி அனுப்பி வைக்கிறார்களாம் இந்திய வியாபாரிகள்.

பாஸ்மதியை விட அதிக வருமானம்
உண்மையில் நமது பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை விட மாட்டுக் கறி ஏற்றுமதிதான் அதிக அளவில் நமக்குப் பணத்தைக் கொட்டித் தருகிறதாம்.

இந்திய எருமை பெஸ்ட்
சர்வதேச அளவில் இந்தியாவின் எருமை மாட்டுக் கறிதான் சிறந்ததாக, சுவையானதாக, மெல்வதற்கு எளிதாக இருக்கிறதாம். ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய எருமை மாட்டுக் கறிக்கு நல்ல கிராக்கி உள்ளதாம்.

பசு புனிதமாச்சே
இந்துக்கள் நிறைந்த நாடு, பசுவைப் புனிதமாக கருதும் நாடு என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாட்டுக் கறியின் அளவு கூடிக் கொண்டேதான் போகிறதாம்.

தடையத் தாக்கு!
இந்தியாவில் எருமை மாடுகளை வெட்டுவதற்குத் தடை எதுவும் இல்லை என்பதால் அதிக அளவில் அவை வெட்டப்படுகிறதாம்.

4வது இடத்தில் அமெரிக்கா
மாட்டுக் கறி ஏற்றுமதியில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 2வது இடம் பிரேசிலுக்கு, 3வது இடம் ஆஸ்திரேலியாவுக்கு. 4வது இடத்தில்தான் வருகிறது அமெரிக்கா.

சாப்பிடுவதில் நம்பர் ஒன்
அமெரிக்கர்கள் ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் பிற நாட்டு மாடுகளை அடித்துச் சாப்பிடுவதில்தான் நம்பர் ஒன் போல.

வருமானம் மாட்டுக்கே அதிகம்
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மாட்டுக் கறி ஏற்றுமதி மூலம் 4.8 பில்லியன் டாலர் வருவாய் சம்பாதித்துள்ளது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் 4.5 பில்லியன் டாலர்தான். 3வது இடம் அரிசிக்குக் கிடைத்துள்ளது. கோதுமைக்கு நான்காவது இடமே.

வாங்குவதில் வியட்நாம் முதலிடம்
மாட்டுக்கறியை இறக்குமதி செய்வதில் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. மலேசியா, எகிப்து, சவுதி அரேபியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன.

்சீனா
அதேபோல சீனாவிலும் இந்திய மாட்டுக்கறி அதிக அளழில் இறக்குமதியாகிறதாம். இந்திய மாட்டுக் கறியில் 40 சதவீதம் வியட்நாமுக்குப் போகிறது. இவை சீனா வழியாகததான் செல்கின்றனவாம்.

பீட்டா பாய்ஸ் வாயே திறப்பதில்லையே!
வருடத்திற்கு ஒருமுறை மாடுகளை அடக்க முயலும் விளையாட்டை மல்லுக்கட்டி தடை போட்டு சந்தோஷித்து ஆர்ப்பரிக்கும் பீட்டா குரூப், இப்படி கொடூரமாக கொல்லப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டுக் கறி விற்பனையைத் தடுக்க ஒரு புல்லைக் கூட இதுவரை புடுங்கியதில்லை என்பது சற்று ஆச்சரியமான விஷயம்தான்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications