சிபிஐ நடவடிக்கையில் தலையிட்ட, உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி அதிரடி நீக்கம்!
டெல்லி: மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் மாதங் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி தலையிட்டதாகவும், மதங் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையை கைவிடும்படி சி.பி.ஐ.யிடம் கூறியதாகவும் தகவல் வெளியானது. சி.பி.ஐ.யிடம் பேசியதை அவரும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, மாதங் சிங் விவகாரத்தில் தலையிட்டதாகக் கூறி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அனில் கோஸ்வாமிக்கு பிரதமர் அலுவலகம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் பதவியில் இருந்து அனில் கோஸ்வாமி நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அனில் கோஸ்வாமியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுமார் ஒரு மணி நேரம் பேசினார். இதேபோல் சி.பி.ஐ. இயக்குனர் அனில் சின்காவிடமும், இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்த ராஜ்நாத் சிங், இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்தார். இதனிடையே டிஸ்மிஸ் செய்யாமல், ராஜினாமா கடிதத்தை கேட்டு எழுதி பெற்றதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications