ஓரினச் சேர்க்கை வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஓரினச்சேர்க்கை தொடர்பான மறு சீராய்வு மனுவை 5 நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கை உறவை கிரிமினல் குற்றமாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததற்கு எதிராக தன்னார்வ தொண்டு நிறுவனம், ஓரினச்சேர்க்கை உறவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து 8 மறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை இன்று நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ஜெகதீஷ் சிங் கேஹார் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மறுசீராய்வு மனுவை 5 நபர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்தே இந்த மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தடையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி நாஷ் பவுண்டேஷன் எனும் தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications