கூலிப்படை மிஸ் பண்ணா.. புருஷனை நான் மலையில் இருந்து தள்ளிடுறேன் – ஹனிமூனில் சோனம் போட்ட ஸ்கெட்ச்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் சென்ற கணவனை, மனைவியே காதலன், கூலிப்படையுடன் சதி திட்டம் தீட்டி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கூலிப்படை மிஸ் செய்துவிட்டால் செல்பி எடுப்பது போல சென்று மலை உச்சியில் இருந்து நானே என் கணவனை தள்ளிவிடுகிறேன் என்று சோனம் காதலன் ராஜிடம் கூறியுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி. தொழிலதிபரான இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமானவுடன் இந்த புதுமண தம்பதி ஹனிமூனுக்காக மே 20 ஆம் தேதி மேகாலயா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ரிசார்ட்டில் தங்கி சில நாட்கள் சுற்றி பார்த்துள்ளனர்.

கடந்த மே 23 ஆம் தேதி திடீரென்று புதுமண தம்பதி இருவரும் மாயமாகிவிட்டனர். ஹனிமூன் சென்ற தம்பதி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புதுமண தம்பதி உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். காவல்துறையும் அவர்களை தேடி வந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி ராஜாவின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிவில் ராஜா ரகுவன்ஷியின் தலையில் வெட்டு காயம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. புதிதாக திருமணமாகி ஹனிமூன் சென்ற கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவி சோனத்தின் நிலை என்ன ஆனது என்றும் வெளியில் தெரியவில்லை. இதனால் இந்த வழக்கில் மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சோனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். காதலனுடன் இணைவதற்காக சோனமே கூலிப்படை மூலம் இந்த கொலையை செய்ததாக காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டது. இதுதொடர்பாக சோனம், அவரின் காதல், கூலிப்படையினர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து மேகாலயா காவல்துறையினர் கூறுகையில், "திருமணம் முடிந்த உடனேயே இந்த கொலைக்கான திட்டமிடல் தொங்கிவிட்டது. அதன் காரணமாக தான் இதை திட்டமிடப்பட்ட கொலை என்கிறோம். மே 11 ஆம் தேதி திருமணம் ஆனது. மே 15 ஆம் தேதி சோனம் அவரின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதிருந்தே கொலை குறித்து சோனம் செல்போன் மூலம் ராஜிடம் ஆலோசனை செய்து வந்தார். அவர்கள் பேசி தான் மேகாலயாவை தேர்வு செய்தனர்.
சோனம், ராஜ் குஷ்வஹா இணைந்து கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கொலையை அரங்கேற்றியுள்ளனர். கொலை சம்பவத்தின் மூளையாக செயல்பட்டது ராஜ் என்றாலும், சோனம் அவருக்கு பக்க பலமாக இருந்துள்ளார்.
தங்களின் இருப்பிடத்தை லைவ் லொக்கேசனாக அனுப்பியது, ஹனிமூனை நீட்டித்தது என்று அவர் கொலைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளார்.மே 23 ஆம் தேதி ராஜாவை கொலை செய்ய ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டு பகுதியை தேர்வு செய்துள்ளனர். அங்கு புதுமண தம்பதி, காதலன் ராஜ், கூலிப்படையைச் சேர்ந்த ஆனந்த், ஆகாஷ், விஷால் ஆகிய 3 பேர் இருந்துள்ளனர்.
ராஜா, சோனம் பேசிக் கொண்டிருக்கும்போது கூலிப்படையினர் வந்து தாக்குவதுதான் திட்டம். இதுகுறித்து சோனம் தன் காதலன் ராஜிடம், அவர்கள் மூன்று பேரை சரியாக குறி வைத்து ராஜாவை தாக்க சொல். இல்லாவிடின் போட்டோ எடுப்பது போல சென்று என் கணவனை நானே மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகிறேன் என்று கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.
ஆனால் காவல்துறையின் குற்றச்சாட்டுகளை சோனம் மற்றும் ராஜ் குன்வஹா குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த கொலை சம்பந்தம் இல்லை. காவல்துறை அவர்கள் மீது வீண் பழி சுமத்துவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications