சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த துப்புரவு ஊழியர்.. மொபைலில் ஷாக் போட்டோக்கள்
Recommended Video

பெங்களூர்: சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை ஆபாச கோணத்தில் செல்போனில் படம் எடுத்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் இந்திராநகரிலுள்ள, ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 24 வயதாகும், தர்மேந்திர குமார் யாதவ் என்பவர் அந்த நிறுவனத்தில் துப்புரவு வேலையில் ஈடுபட்டு வந்தார்.

ரகசிய கோணங்கள்
தர்மேந்திர குமார் யாதவ், தனது செல்போனில், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை பல்வேறு கோணங்களில் ரகசியமாக படம் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். வீட்டுக்கு சென்ற பிறகு அதை பார்த்து ரசிப்பதும், நண்பர்களுக்கும் அவற்றை ஷேர் செய்து அந்த பெண்களை பற்றி ஆபாசமாக கமெண்ட் அடித்து இன்பம் காணுபவருமாக இருந்துள்ளார்.

சிக்கிய காமுகன்
இப்படித்தான், சம்பவத்தன்றும், ரகசியமாக பெண்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார், தர்மேந்திர குமார். அப்போது, பெண் ஊழியர் ஒருவர் இதை கவனித்துவிட்டார். இதுகுறித்து சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊழியர்கள் சேர்ந்து, தர்மேந்திர குமாரை கையும் களவுமாக பிடித்து, செல்போனை பிடுங்கினர்.

கழிவறைக்குள் கேமரா
செல்போனின் கேலரி பகுதியில் பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆபாச கோணங்களில் பெண் ஊழியர்கள் போட்டோக்கள் அதில் இருந்தன. மேலும், சில பெண் ஊழியர்கள் கழிவறைக்கு சென்றபோது உள்ளேயிருந்து பதிவான வீடியோக்களும் இருந்தன. சுத்தம் செய்ய செல்லும்போது, ரகசியமாக செல்போனை கழிவறைக்குள் வைத்துவிட்டு பெண்களை வீடியோ எடுத்திருப்பது அம்பலமானது.

போலீஸ் நடவடிக்கை
இதுகுறித்து சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354சி-ன்கீழ், துப்புரவு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். ஆபாச படங்கள் அனைத்தும், டிசம்பர் 20 முதல் ஜனவரி 11ம் தேதிக்குள் எடுக்கப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications