மொத்தமாக "கை"யில் குத்திய தமிழர்கள்.. ஷாக்கில் பாஜக.. இப்படித்தான் மலர மறுத்தது "தாமரை"
Recommended Video

பெங்களூரு: பெங்களூருவில் எதிர்பார்த்த வெற்றியை பாஜக பெறத் தவறியதால்தான் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டது. பாஜகவின் கனவை நாசமாக்கியதில் தமிழர்களின் பங்கு மிகப் பெரியது.
பெங்களூரு கிட்டத்தட்ட காங்கிரஸ் பக்கமே சாய்ந்தது. பெங்களூரு நகரில் மொத்தம் 28 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் 2 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கவில்லை.
தேர்தல் நடந்த 26 தொகுதிகளில் 13 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. பாஜகவுக்கு 11 இடங்கள் கிடைத்தன. மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 2 சீட் கிடைத்தது.

எதிர்பார்த்து ஏமாற்றம்
நகர்ப்புற வாக்காளர்கள்தான் பாஜகவின் பெரும் பலம். அந்த வகையில் பெங்களூரு எப்படியும் நமக்கு கிடைத்து விடும். எளிதாக வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது பாஜக. ஆனால் பெங்களூரு மக்கள் ஏமாற்றி விட்டனர்.

கைக்கு விழுந்த வாக்குகள்
வழக்கம் போல பெங்களூருவின் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸுக்கு வந்து சேர்ந்தது. 13 தொகுதிகளை அது அள்ளி விட்டது. இதுதான் பாஜகவை பெரிதாக பதம் பார்த்து விட்டது.

தமிழர்கள் நிராகரிப்பு
பாஜக பெரும் தோல்வி அடைய இன்னொரு முக்கியக் காரணம் தமிழர்களின் வாக்குகள் காங்கிரஸுக்குப் போய் விட்டதால்தான். காங்கிரஸுக்கே தமிழர்கள் பெருமளவில் வாக்களித்து விட்டனர். இதை பாஜக எதிர்பார்க்கவில்லை.

கட்டா சுப்ரமணியம் அதிர்ச்சி
சில தொகுதிகளில் பாஜகவுக்கு தமிழர்களின் வாக்குகள் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சிவாஜி நகரில் பாஜக வேட்பாளர் கட்டா சுப்பிரமணியம் நாயுடு வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்குள்ள பெரும்பான்மை தமிழ் வாக்குகள் அப்படியே காங்கிரஸ் வேட்பாளர் ரோஷன் பெய்க்குக்குப் போய் விட்டது.

15 சீட் கிடைத்திருந்தால்
பெங்களூரில் மட்டும் 15 சீட்களுக்குக் குறி வைத்திருந்தது பாஜக. ஆனால் கிடைத்தது 11 மட்டுமே. பாஜக குறி வைத்த 15 சீட்டுகளை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் வென்று விட்டன.
பெங்களூரு பாஜகவை கைவிட்டதே அக்கட்சிக்கு மிகப் பெரிய பாதகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications