வீடு முழுக்க சீப்பான பேக்குகள்! உள்ளே பார்த்தால் யம்மாடியோவ்! மிரண்ட அதிகாரிகள்! சிக்கிய சாட்டர்ஜி
கொல்கத்தா: முன்னாள் திரிணாமுல் அமைச்சருக்குச் சொந்தமான வீட்டில் 29 கோடி ரூபாய் பணம் எப்படிப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் இதற்கு முன்னதாக அங்குக் கல்வித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
கல்வி அமைச்சராக இருந்த சமயத்தில் ஆசிரியர் தேர்வு ஆணைய ஆட்சேர்ப்பில் இவர் பல கோடி ஊழல் செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அர்பிதா முகர்ஜி
கடந்த சில வாரம் இவரது நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் இரு நாட்கள் நடந்த இந்தச் சோதனையில் சுமார் 21.90 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸின் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிளாட்
இதற்கிடையே நேற்றைய தினம் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு அப்பார்ட்மென்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் சுமார் 27.90 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. கொல்கத்தாவின் பெல்காச்சியா பகுதியில் உள்ள அர்பிதாவின் பிளாட்டில் தான் நேற்று இந்த ரெய்டு நடத்தப்பட்டது. பார்த்தா சாட்டர்ஜி இந்த வீட்டை ஊழல் பணத்தைப் பதுக்கி வைக்கவை பயன்படுத்தி உள்ளார். சில நாட்களில் அங்கிருந்து பணத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் அவர் திட்டமிட்டு இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீப்பான பேக்
சோதனையின் போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்த கப்போர்ட் ஒன்றைத் திறந்து உள்ளனர். உள்ளே மலிவான கைப்பைகள் இருந்துள்ளது. முதலில் இதைப் பெரிதாக அதிகாரிகள் கருதவில்லை. ஆனால், அதை எடுத்து போது, அது வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்து உள்ளது. இதையடுத்து, சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உள்ளே பார்த்துள்ளனர். அங்கு வெள்ளை நிறத்தில் செங்கல் போன்ற பாக்கெட்டுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மிரண்ட அதிகாரிகள்
அதைத் திறந்த பார்த்த போது அதிகாரிகளே மிரண்டு போய்விட்டனர். ஒவ்வொரு பைக்குளும் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. அந்த ஒரு பாக்கெட்டில் மட்டும் சுமார் ரூ.50 லட்சம் இருந்துள்ளது. இப்படி அங்குப் பல பைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இப்படி அந்த வீடு முழுக்க பல்வேறு பைகள் இருந்துள்ளன. விலை குறைந்த பைகளுக்குள் இத்தனை கோடி ரூபாய் பணம் இருந்ததை அதிகாரிகளால் நம்ப முடியவில்லை.

வெகு சிலர்
முதலில் பார்க்கும்போது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையிலேயே இந்த பைகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும், அந்த பிளாட்டில் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களாம். அவர்கள் தான் இந்த பைகளில் பணத்தை வைத்து வீட்டில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் வைப்பார்களாம், அந்த வீடு முழுவதும் இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே கைப்பற்றப்பட்டன.

நகைகள்
பணம் தவிர, அந்த வீட்டில் சுமார் 4.31 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்கச் செங்கற்கள், 500 கிராம் எடையுள்ள ஆறு பிரெஸ்லெட்கள், தங்கப் பேனா மற்றும் நகைகளும் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும் அந்த வீட்டில் இருந்த லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது. லாக்கரை உடைத்தே அதிகாரிகள் தங்கத்தை மீட்டனர்.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications